India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை வைகை ஆற்றில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் கலக்கும் நிலையில் தொடர்ந்து மருத்துவக் கழிவு உள்ளிட்ட குப்பைகள் கட்டப்படுவதால் ஆறு தனது அடையாளத்தை இழந்து மாசடைந்து வருகிறது. இந்நிலையில் ‘வைகை ஆற்றிற்குள் குப்பைகள், கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவ கழிவுகள் கொட்டுவது பேராபத்தானது, இதனை செய்வோர் தண்டிக்கப்படுவர்’ என ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகரில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவிக்கும் விதமாக மாணவர்கள், தன்னார்வலர்கள் 3 – 5 நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை தயாரித்து copmctn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலக சமூக ஊடகப்பிரிவில் நேரடியாக ஆக.18க்குள் சமர்ப்பிக்கலாம். இதில் சிறந்த 3 குறும்படங்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

மதுரை கீரைத்துறை SI செல்வம் நேற்று(ஆக.,11) போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது மயானம் சாலை, ரேசன் கடையை பகுதியில் இருந்த 6 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர். விரட்டிப் பிடித்த போலீசார் விசாரித்ததில், அப்பகுதி ரைஸ்மில் உரிமையாளரிடம் பணம் பறிக்க திட்டம் போட்டது தெரிந்தது. கீரை துறை போலீசார் வழி விட்டான்(23) மற்றும் 17 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் என 6 பேரை நேற்று(ஆக.,11) கைது செய்தனர்.

மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக வைகை ஆற்றின் கோரிப்பாளையத்தில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. தொடர்ந்து வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வைகை ஆற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எதிர்காலத்தில் தமக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருக்கலாம் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இன்று மதுரையில் ‘ரகு தாத்தா’ திரைப்பட புரமோஷனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்த அவர், “ரகு தாத்தா” திரைப்படம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் படமாகவும் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும் என்றார்.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழக உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நாளை(ஆக.12) மதுரை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் செப்.6 முதல் செப்.16 வரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்களின் சங்க செயலாளர் பப்பாசி முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தக திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி பதிப்பகங்களின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வ வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மதுரையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் குடை கோவிலுக்குள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும், குடையை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம்ம மதுரையில கோபுரம் சினிமாஸ், குரு தியேட்டர், வெற்றி சினிமாஸ்(வில்லாபுரம், மாட்டுத்தாவணி), ஷா தியேட்டர், ஐநாக்ஸ், தங்க ரிகள், அம்பிகா சினிமாஸ்-ல ஞாயிற்றுக்கிழமையான இன்னைக்கு(ஆக.,11) நீங்க என்ன படம் பாக்க போறீங்க. இது இல்லாம கோயில், ECO பார்க், நாயக்கர் மஹால், தெப்பக்குளம் போறீங்களா. இந்த சூப்பரான விடுமுறைய நீங்கள எப்படி கடக்க போறீங்கன்னு comment-ல சொல்லுங்க.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் அன்னை மீனாட்சி சேர நாட்டு மகாராணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சித்திரை வீதியில் உலா வந்த மீனாட்சியம்மளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.