India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகரில் கடந்த ஓராண்டில் போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்ததற்காக 720 வழக்குகளில் 764 குற்றவாளிகளை கைது செய்து 1953கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!
மதுரை மாவட்டத்தில் வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) 450 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர், செயலர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி,2024-25ஆம் ஆண்டின் வளர்ச்சி பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வரும் 18ஆம் தேதி சிறுவர் சிறுமியருக்கான இலவச மேற்கத்திய நடன பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக கலைஞர் நூற்றாண்டு நூலக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் http://tinyurl.com/kclkids என்ற இணைய பக்கத்தில் முன்பதிவு செய்துகொண்டு நடன பயிற்சியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் 2024ஆம் ஆண்டு திருப்பவித்திர உற்சவம் வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. 15ஆம் தேதி காலை 9 மணி அளவில் 108 வெள்ளி கலசங்கள் வைத்து திருமஞ்சனம் நடைபெறும் என கள்ளழகர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை இன்று (ஆக.12) வழங்கினார். இதில் மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார் ஆய்வாளர் அருணுக்கு முதல்வர் விருதினை வழங்கி கௌரவித்தார். சிறந்த பணிக்காக விருது பெற்ற ஆய்வாளருக்கு மதுரை மாவட்ட காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் மதுரையில் நடைபெற்ற “ரகு தாத்தா” திரைப்பட பிரமோஷனல் நிகழ்ச்சிக்காக வருகை புரிந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பொற்றாமரைக்குளம் முன்பாக நின்று அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது வைரலாகி வருகிறது.
தென்காசி – செங்கோட்டை இடையே ரயில் சிக்னல் பராமரிப்பு பணி காரணமாக 4 ரயில்கள் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். மதுரை – செங்கோட்டை ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். செங்கோட்டை – மதுரை ரயில் தென்காசியில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில், மாநகருக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா தடுப்பு குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 7 மாதங்களில் 243 கஞ்சா வழக்குகளில் 381 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 392 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா & 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஆக.,12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.
Sorry, no posts matched your criteria.