India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
மதுரை, கோ.புதூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை மறுநாள்(ஆக.,16) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பணியாளர்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 10 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் இதில் பங்கேற்று பணி வாய்ப்புகளைப் பெறலாம் என துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்களையும் பணியிடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தூய்மை பணியாளர்களிடம் போதிய ஒத்துழைப்பின்றி நடந்துகொள்வது, நீண்ட நாட்களாக ஒரே வார்டில் பணியாற்றியது போன்ற காரணங்களால் அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார ஆய்வாளர்களை வெவ்வேறு வார்டுகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் சுதந்திர தினம் அன்று மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டு வருகின்றனர். அந்தவகையில், மதுரை மாவட்டத்திலும் மதுக்கடைகள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது விருதுநகர் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் பாஜகவினர் இன்று (ஆக.13) புகார் மனு அளித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட த.மா.கா சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று(ஆக.,12) நடைபெற்றது. இதில், திருமங்கலம் & திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டி அறிவித்துள்ளார். இதனால் அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
மதுரையில் ஆவின் மூலம் நுகர்வோருக்கு வழங்கிய பால் பாக்கெட்டுகள் சுமார் 6 ஆயிரம் லிட்டருக்கு மேல் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று(ஆக.,12) பால் முகவர்கள் ஆவினில் வந்து பால் பாக்கெட்டுகளை மாற்றிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த ஆவின் நிர்வாகம், இனிமேல் இதுபோன்று நடைபெறாது எனவும் உறுதியளித்துள்ளதாக தகவல்.
மதுரை மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று(ஆக.,15) 450 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர், செயலர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி,2024-25ஆம் ஆண்டின் வளர்ச்சி பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாநகரில் கடந்த ஓராண்டில் போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்ததற்காக 720 வழக்குகளில் 764 குற்றவாளிகளை கைது செய்து 1953கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.