Madurai

News July 25, 2024

மதுரை ஸ்பைஸ் ஜெட் மாற்று ஏற்பாடு

image

துபாயிலிருந்து தினசரி காலை 9 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12 மணியளவில் வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம், பின்னர் 1:30 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு செல்லும். இதில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக துபாயில் இருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனால் மதுரையிலிருந்து துபாய் செல்ல வேண்டிய பயணிகள் இன்று செல்ல மாற்று ஏற்பாடுகளை நிறுவனம் அறிவித்துள்ளது.

News July 25, 2024

இனி முன் அனுமதி தேவையில்லை: ஐகோர்ட் உத்தரவு

image

மதுரை காவல் துறையில் போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட தனிநபர் வழக்கை ரத்து செய்யக் கோரி, பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான காவல் துறையினர் மீது, தனிநபர் வழக்கு தொடர முன் அனுமதி பெற தேவையில்லை என உத்தரவிட்டனர்.

News July 25, 2024

மலேசியாவில் மதுரை மாணவர்கள் சாதனை

image

மலேசியா கோலாலம்பூரில் சர்வதேச ஸ்பீட் பவர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடை பெற்றது. இதில் இந்தியா உட்பட 10 நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் பூம்சே, கியொருகி, ஸ்பீடு கிக்கிங் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் அமெச்சூர் மதுரை மாவட்ட விளையாட்டு டேக்வாண்டோ சங்கம் சார்பில் 14 போட்டியாளர்கள் பங்கேற்று 4 தங்கம், 7 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

News July 25, 2024

மதுரை ஐகோர்ட்டில் 12 லட்சம் வழக்குகள் விசாரணை

image

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கடந்த 2004இல் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வழக்குகள் இங்கு விசாரிக்கப்படுகின்றன. இன்று 21ஆம்ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதித்துள்ளது.

News July 24, 2024

தமிழக அளவில் முதலிடம் பிடித்த மதுரை

image

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 24) அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி மதுரை மக்களை வாட்டி வதைத்துள்ளது. மதுரை மாநகர் பகுதியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்ட நிலையில், இன்று கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

News July 24, 2024

ஒரே நாளில் 6 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

மதுரை மாநகரில் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளமனூர் முத்துமணி (26), திருப்பரங்குன்றம் தமிழரசன் (22), தெற்கு வாசல் கணேஷ் பாண்டி என்ற கிஷோர் (23), காமராஜர் சாலை அருண்குமார் (22), சிவகங்கையைச் சேர்ந்த பூவந்தி குருமூர்த்தி (26), தென்பரங்குன்றம் சிங்கி ராஜா (22) ஆகிய 6 பேர் இன்று மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உத்தரவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News July 24, 2024

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் இன்று (ஜூலை 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ந் தேதி நடைபெற உள்ளது. 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ற இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News July 24, 2024

மதுரையில் கூண்டோடு மாற்றம்

image

மதுரை மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல்துறையில் பணிபுரிந்துவந்த காவல்துறையினரை கூண்டோடு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் காவலர்கள் மாற்றப்படுவது வழக்கம். ஆனால் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையின் கீழ் பணிபுரியும் 15 காவலர்கள், சார்பு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர்களை கூண்டோடு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

News July 24, 2024

முதல்வர் மாய தோற்றத்தை உருவாக்குகிறார் – டாக்டர் சரவணன்

image

ஈபிஎஸ் ஆட்சியை காட்டிலும் தற்போது திமுக ஆட்சியில் தற்கொலைகள், சாலை விபத்துகள், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை போல் மாயத்தோற்றத்தை முதல்வர் உருவாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

News July 24, 2024

மதுரை உலகத் தமிழ் சங்கம் சார்பில் கதை போட்டி

image

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூற்பதிப்புச் செம்மல் வைரவன் அறக்கட்டளை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கதைப் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என அறிவித்துள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் கதைகளை எழுதி, இயக்குநர், உலக தமிழ்ச் சங்கம், மருத்துவர் தங்கராசு சாலை, மதுரை-625 020 என்ற முகவரிக்கு ஜூலை.31 க்குள் அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!