India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான நேற்று(ஆக.,15) விதியை மீறி விடுமுறை அளிக்காத, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 299 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் – 131, சிவகங்கை – 39, ராமநாதபுரம் – 26 என மொத்தம் மதுரை மண்டலத்தில் 299 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கால தாமதமின்றி ரயில் இயக்குவதில், தேசிய அளவில் மதுரை ரயில்வே கோட்டம் முதலிடம் பெற்றுள்ளதாக கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா தெரிவித்துள்ளார். மதுரையில் 99% ரயில்கள் கால தாமதம் இல்லாமல் இயக்கப்பட்டுவதாக தெரிவித்த அவர், தேசிய அளவில் துல்லியமான நேரத்தில் ரயில்களை இயக்கியதில் மதுரை கோட்டம் முதன்மைப் பெற்றுள்ளது என்றுள்ளார். இதேபோல, சரக்கு ரயில்கள் சராசரியாக 38.19 கிமீ வேகத்தில் இயக்கப்படுவதாக தகவல்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே 31.12.2024 க்குள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் கடந்த 4 மாதங்களில் மதுரை கோட்டத்திற்கு ரூ. 414 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ரயில்களில் 1.49 கோடி பயணிகள் பயணித்துள்ளனர் என்று கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது. கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மதுவில்லா ஊராட்சியாக மாற்றவும், உயிரி பல்வகைமை மேலாண்மை குழுவை அமைத்து ஊராட்சியின் வளங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில், 78வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விசுவநாதன் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இதேபோல் விமான நிலைய இயக்குநர் முத்துகுமார் தேசிய கொடியேற்றினார். பின் விமான நிலையத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியினை மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று(ஆக.,15) ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்பாண்டிச்செல்வி , கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் நாளை(ஆக.,16) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கருத்துகள், குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரை உத்தப்புரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் வழிபடுவதில் இரு சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 10 ஆண்டுக்கு முன் மூடப்பட்ட கோயில், மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இக்கோயில் பகுதியில் நேற்று(ஆக.,14) ஆய்வு செயத SP அரவிந்த், அனைத்து தரப்பு மக்களும் வழிபடுவதில் பிரச்னை இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு டிஎஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளார்.
விராலிப்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது என ஏற்கனவே போட்ட கிராமசபை தீர்மானத்தை மதிக்காமல் குவாரியை அமைக்க முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகளை கண்டித்து இன்று (ஆக 15) நடைபெற உள்ள கிராம சபையை புறக்கணிப்பதாக அறிவித்து, நேற்று நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். கடந்த 6ஆம் தேதி வாடிப்பட்டியில் நடந்த கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
Sorry, no posts matched your criteria.