India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கேகே நகர் எம்ஜிஆர் சிலையிலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பேராசியர் ராம சீனிவாசன், பூங்கா முருகன் கோவிலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் மாநகர மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக, பாஜக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிக அளவிலான கட்சி தொண்டர்கள் வருவார்கள் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேட்பாளருடன் 5பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அழகர் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அழகர் மலை அடிவாரத்தில் இருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து 24.03.2024 (இன்று) 23.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண். 12687 மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில், 52 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால், 25.03.2024 (நாளை) மதுரையில் இருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் இதை முன்வைத்து பயணங்களை திட்டமிட அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கள்ளிக்குடி – விருதுநகர் 4 வழி சாலையில் காரியாபட்டி விலக்கு பகுதியில் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை நோக்கி வந்த காரில் ரூ.9 லட்சம் உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: கே.கே நகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 10 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகின்ற சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என மதுரை பழம் உற்பத்தியாளர் சங்க தலைவர் திருமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் சுங்கச்சாவடி கட்டண உயர உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு வியாபாரிகள் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, மதுரையில் முனைவர் மோ.சத்யாதேவி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.