Madurai

News July 28, 2024

தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் புதிய படம் பதிவேற்றம் செய்தவர் கைது

image

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்களை பதிவேற்றம் செய்த மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை மதுரையில் கேரளா போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இணையதளத்தில் புதிய படம் ஒன்றை பதிவேற்றம் செய்ய ரூ.5000 கமிஷன் பெறப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News July 28, 2024

மதுரையில் 5 புதிய உலர் களங்கள்

image

விவசாய பொருட்கள் இழப்பை தடுக்க வேளாண் வணிகத்துறை சார்பில் 2021 ஆம் ஆண்டு முதல் உலர் கலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2 ஆண்டுகளில் ரூ.20 கோடியில் 185 உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.34 கோடியில் 100 உலர் களங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் உலர் கலங்கள் கட்டப்பட்டு அடுத்த மாத இறுதிகுள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

News July 28, 2024

தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

image

முல்லை பெரியாறு பிரதான பாசன கால்வாய் பகுதியில் முதல் போக விவசாயம் செய்வதற்கு கடந்த 3ஆம் தேதி முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பாசன கால்வாய் மூலம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சார்பில் 16,452 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது திறந்து விடப்பட்ட நீரை நம்பி பல்வேறு விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது நெற்பயிருட்டு தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

News July 27, 2024

மக்களுக்கு பூஜ்ஜியம் தான் – Ex அமைச்சர் கிண்டல்

image

மதுரை வாடிப்பட்டியில் அதிமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக கூட்டணியில் உள்ள 39 எம்.பி.க்கள்., நாடாளுமன்றத்தில் எதுவும் பேசவில்லை என்றும், இந்த எம்.பிக்கள் மூலம் ராஜ்யம் கிடைக்கும் என்று நினைத்த மக்களுக்கு பூஜ்ஜியம் தான் கிடைத்துள்ளது என்று விமர்சித்தார்.

News July 27, 2024

2 வாரத்தில் 16 கொலைகள் – செல்லூர் ராஜூ

image

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் புதிதாக மத்திய அரசு நிதி ஒதுக்காதது மதிரி மக்களை ஏமாற்ற திமுக நாடகம் நடத்துகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளுக்கும் முன்னிலை அளிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் 2000 அம்மா மினி கிளினிக்கை மூடுவிட்டனர். மதுரையில் 2 வாரத்தில் 16 கொலைகள் நடந்துள்ளதாக செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

News July 27, 2024

மதுரை ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை

image

மக்களுடன் முதல்வர் திட்ட செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் மதுரை ஆட்சியர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுடன் தற்போது காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைசெயலகத்தில் இருந்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News July 27, 2024

மாநகர காவல் ஆணையர் பெயரில் போலி ஃபேஸ்புக்

image

மதுரை காவல் ஆணையர் பெயரில் மீண்டும் போலி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி மோசடிக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரின் ஃபேஸ்புக் கணக்குக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் வந்துள்ளது. தொடர்ந்து மெசேஜ் மூலம் பல்வேறு தகவல்களை கேட்டதால் சந்தேகம் அடைந்த சமூக ஆர்வலர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

News July 27, 2024

பொதுத்தேர்வு மோசடியில் 9 பேர் கைது – அதிர்ச்சி தகவல்

image

கடந்த ஆண்டு நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் சிவகங்கையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 2 மாணவர்களின் கையெழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மதுரையில் உள்ள ஒரு கல்வித்துறை அலுவலகத்தில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 1 மாணவன், 4 பெற்றோர்கள்,4 அதிகாரிகள் என 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

News July 27, 2024

வைகை எக்ஸ்பிரஸ் 2 வாரங்களுக்கு ரத்து

image

தாம்பரம் பணிமனையில் 2 ஆம் கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, எழும்பூர் – மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ்(12635) ஆக.1 முதல் ஆக.14 வரை செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.48 மணிக்கு புறப்படும். எழும்பூர் – திருச்சி எக்ஸ்பிரஸ்(12653)ஆக.2 முதல் ஆக.15 வரை செங்கல்பட்டில் இருந்து இரவு 12.40 க்கு புறப்படுகிறது.

News July 27, 2024

சதுரகிரி மலை ஏற மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி

image

விருதுநகரில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையையொட்டி மலைக்கு செல்ல அக.1 முதல் ஆக.14 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக் கூட்டம் நேற்று மதுரை, விருதுநகர் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மலை ஏற காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொடுட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!