Madurai

News March 27, 2024

“மதவெறிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை”- செல்லூர் ராஜூ

image

மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதே அதிமுகவின் இலக்கு என முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று இரவு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபெற்ற மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் “மதவெறிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை” எனவும் பாஜகவை விமர்சனம் செய்து பேசினார்.

News March 27, 2024

வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல் 

image

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை ரத்துசெய்துவிட்டு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடை முறைப்படுத்த வலியுறுத்தி மதுரையை சேர்ந்த பெண் வக்கீல் சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். சகோதரிகளான இருவரும் பலவேறு சமூகப் பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2024

மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் சொத்து மதிப்பு

image

மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராம சீனிவாசன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில், அதில் அவரது சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராம சீனிவாசன் மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் சொத்துக்கள் 2.48 கோடி உள்ளதாகவும், அசையா சொத்துக்கள் ராம சீனிவாசன் மற்றும் அவரது மனைவி பெயரில் 1.02 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News March 26, 2024

மதுரையில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல்

image

மதுரை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சங்கீதாவிடம் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அருகில் மகளிர் பாசறை சாராள், இளைஞர் பாசறை சாகின் பாத்திமா மற்றும் வழக்கறிஞர் பாசறை விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.

News March 26, 2024

மதுரை தேர்தல் பணிகளில் குளறுபடிகள்

image

தேர்தல் பணிகளில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஒதுக்கீடு உத்தரவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு சூப்பர்வைசர் பணியும், முதுகலை ஆசிரியர்களுக்கு உதவியாளர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் சீனியர், ஜூனியர் ஈகோ யுத்தம் துவங்கியுள்ளது.
ஆசிரியைகளை அவர்கள் சேலை கலரைக் குறிப்பிட்டு மைக்கில் அழைப்பது வேறு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது என்றனர்.

News March 26, 2024

அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு தெரியுமா!

image

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் அவரது சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் அவரது பெயரில் அசையும் சொத்து 6.75 கோடியும், அவரது துணைவியார் பெயரில் 3 கோடி இருப்பதாகவும், அசையா சொத்து அவர் பெயரில் 4.48 கோடியும், துணைவியார் பெயரில் 3.13 கோடியும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News March 26, 2024

மதுரையில் பிறப்பித்த அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகரில் இறுதி ஊர்வலத்தின்போது போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும், இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பேனர் நிறுவக்கூடாது, மலர்வளையம், பூமாலைகள் சாலை, வாகனங்களின் மீது தூவக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகளை மீறி மக்களின் பாதுகாப்பிற்கும், உயிருக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News March 26, 2024

மதுரை: தங்கப் பதக்கம் வென்ற பெண் காவலர்

image

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 16ஆவது அனைத்து இந்திய காவல்துறை இறகுபந்து போட்டி நடைபெற்றது. 29 மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பங்கேற்ற இப்போட்டியின் தமிழக அணி சார்பாக மதுரை மாநகர
ஆள்கடத்தல், மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா தங்கப்பதக்கம் வென்றார். காவல் ஆய்வாளரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

News March 26, 2024

மதுரை: 6 வருடங்களுக்குப் பின் வாலிபர் கைது

image

மதுரை விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த கணேசன் மகன் சேதுபதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவர் 2018ஆம் ஆண்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அதன் பின் தலைமறைவாகி விட்டவர். சுங்கத்துறை அதிகாரிகள் தந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் போலீசார் சேதுபதியை கைது செய்தனர்.

News March 26, 2024

கணவரை இழந்த பெண் மதுரையில் அரசு பஸ் கண்டக்டரானார்

image

மதுரை, கே.புதூரைச் சேர்ந்தவர் பாலாஜி. அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியில் இருந்தபோது கொரோனாவால் இறந்தார்.
கணவர், இறந்ததால் கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை கேட்டு, பாலாஜியின் மனைவி ரம்யா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
முதலமைச்சர் ஆணையின் பேரில் ரம்யா நேற்று மதுரை உலகனேரி கிளையில் கண்டக்டர் பணியை ஏற்றுக் கொண்டார்.