India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத்தில் தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா? என ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசினார். அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டார். இதற்கு நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில்
பாஜகவின் குரல் மிகுந்த அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள் என மதுரை எம்.பி. தனது X தளத்தில் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கு இணையதளத்தில் தங்களது விவரங்களை தாங்களே பதிவு செய்து தாய் சேய் நல அடையாள எண் (சுயமாக கர்ப்பப் பதிவு எண்) பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://picme3.tn.gov.in/ என்ற இணைய பக்கத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலூர் – மதுரை சாலையில், பள்ளி வாசல் அருகே இன்று காலை தனியார் பேருந்து மீது மேலூரில் இருந்து மதுரையை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், பேருந்தின் முன் பகுதியில் இருசக்கர வாகனம் சொருகிக் கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலூர் எஸ்ஐ பழனியப்பன், இறந்த நபர் குறித்து விசாரித்து வருகிறார்.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மேலக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்தபடி ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு வரி விலக்கு கோரி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதை தொடர்ந்து இன்று திருமங்கலம் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சுங்கச்சவாடி அருகே மறியலில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் பகுதி முழுவதும் இன்று(ஜூலை 30) கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், சுங்கச்சாவடியை போராட்டக்காரர்கள் முற்றுகையிட போவதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு வரி விலக்கு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து போராட்டம்.
மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்தவர் சபரிமணி(28). டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த மேலமாசி வீதியை சேர்ந்த காமேஸ்வரன் விஜயகுமார்(25) & 16 வயது சிறுவன் ஆகியோர் அவருடன் தகராறு செய்து சாலையில் கிடந்த கற்களை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். போலீசார் நேற்று 3 பேரையும் கைது செய்தனர்.
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 புள்ளிகள் வழியே வட்டம் செல்கிறது என்பதை விளக்கும் தோற்றத்தை மதுரை சிஇஓ பள்ளி நிறுவனர் ராசா கிளைமாக்சு கண்டுபிடித்துள்ளாா். இதற்கு, “12 புள்ளிகள் தேற்றம்” என அவா் பெயரிட்டுள்ளாா். இத்தாலியில் நடைபெறவுள்ள உலக கணித மாநாட்டில் ராசா கிளைமாக்சு இந்தத் தோற்றத்தைப் பற்றி விளக்கமளிக்கிறார்.
சட்ட விதிகளுக்கு புறம்பாக அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டை இடம் மாற்றம் செய்து நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு இன்று (ஜூலை 29) கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கடிதத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும் வரை உள்ளூர் மக்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வலியுறுத்தியுள்ளார்.
வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் நாட்டின் 4வது சிறந்த உள்நாட்டு விமான நிலையமாகத் தரம் பெற்றுள்ளதாக சிறந்த பன்னாட்டு விமான நிலையத்திற்காக நடத்திய ஆய்வில் இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. 61 விமான நிலையங்களில் 2024 ஜனவரி முதல் ஜூன் வரை எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் நான்காவது இடம் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.