India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் பிரிவு செயலாளராக, மதுரையைச் சேர்ந்த இளைஞர் எம். ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டார். சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. நீச்சல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் சிறுவர், சிறுமியர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாக (உயரம் 125 செமீ மேல்) இருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி வகுப்பு தொடர்பாக நீச்சல்குளத்தில் நேரில் முன்பதிவு செய்து கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.
கடந்த 26-ந்தேதி தொடங்கி நடைபெற்று வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மதுரை மாவட்டத்தில் உள்ள 488 பள்ளிகளில் பயிலும் 38 ஆயிரத்து 340 மாணவ, மாணவிகள் எழுதினர். தனித்தேர்வர்களாக 474 பேர் தேர்வு எழுதினர். மேலும் 515 மாணவர்கள், 239 மாணவிகள் என மொத்தம் 754 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பாஜக, நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 21 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் உரிய ஆவணம் இல்லாதது, முறையாக படிவம் பூர்த்தி செய்யாத 20 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சு.வெங்கடேசன் பெயரில் அசையும் சொத்து ரூ.98,26,389, அவரது மனைவி பெயரில் ரூ.91,16,165 சொத்து உள்ளது. பூர்வீக சொத்து, மகள் பெயரில் உள்ள சொத்து எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 389 உள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.
2019 தேர்தலின் போது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்து மொத்தம் 19 லட்சம் என்று கணக்கு காட்டியுள்ளார். 5 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்துள்ளது.
மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ், மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான காவல் பார்வையாளர் ரோகன் பி.கனாய் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மதுரை பாராளுமன்றத் தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர் (General Observer) முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்கள், விதிமீறல்கள் இருந்தால் அங்குள்ள தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவிடம் காலை 10 மணி முதல் 11 மணி வரை நேரிலோ அல்லது 8925925380 அலைபேசி எண்ணிலோ புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. விழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகள் , தேரோட்ட நிகழ்வின் போது நீர் மோர் பந்தல், அன்னதான கூடம் அமைக்க https://foscos.fssai.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி சான்று பெறுவது கட்டாயம் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது.
மதுரை சிந்தாமணி சாலை ராஜம்மா நகரில் விஜயலட்சுமி அரிசி ஆலையை சௌந்தர குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இன்று அரிசி ஆலையில் இருந்த போது மர்ம கும்பல் சௌந்தர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆலைக்கு அருகே கருவேலமரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த ராக்கெட்ராஜா ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 2009-ம் ஆண்டில் வாகன சோதனையின் போது குண்டு வீசிய சம்பவத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறி ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்த நிலையில், நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Sorry, no posts matched your criteria.