India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் சமீப நாட்களாக ரீல்ஸ் மோகத்திற்காக இளைஞர்கள் பைக் சாகசம் செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுபவர்களை மதுரை மாநகர காவல் துறை தாங்களாகவே முன்வந்து சமூக வலைத்தளங்களில் கண்காணித்து வருகிறது. மேலும் பைக் சாகசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் நாளை(அக.2) கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளர்களை தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். காலை 11 மணிக்கு நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அதன் அறிக்கையை பிற்பகல் 3 மணிக்குள் மாவட்ட வளர்ச்சி திட்ட இயக்குனரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தொந்தரவு செய்யும் டிஎஸ்பி வினோதினி மீது மதுரை மாநகர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோத காவலால் மன உளைச்சலுக்குள்ளான தன் மகனுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி மதுரை தபால்தந்தி நகரை சேர்ந்த கஸ்தூரி கலா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதில் மதுரை மாநகர் காவல்துறை ஆணையர், டிஎஸ்பி வினோதினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவருக்கு எதிராக பேசிய வழக்கில், சாட்டை துரை முருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளதாக கண்டித்த நீதிமன்றம், பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான் ஆனால் அதனை வரம்பு மீறி பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறை வழங்கியது.
மதுரையில் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்த வழக்கில் அட்டாக் பாண்டிக்கு 2019-ல் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இவருக்கு சாதாரண பரோல் விடுமுறை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு இன்று உத்தரவிட்டது. மேலும் அவர் ஊடகங்களுக்கு எவ்விதமான பேட்டியும் வழங்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் விடுப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ரயில்வே இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக இயக்கப்பட்ட “மேட்டுப்பாளையம் வாரந்திர சிறப்பு ரயில்” (06030) சேவை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு வசதி உண்டு. முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஓசூர், ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க மக்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அதற்காக வஞ்சிநகரத்தில் 279 ஏக்கர் நிலமும், தல்லாகுளத்தில் 15 ஏக்கர் நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் 3 ஆவது சிப்காட் புத்தாக்க மையம் மதுரையில் அமைய உள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆடி அமாவாசையை ஒட்டி சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல ஆக.1 முதல் ஆக.5 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் சதுரகிரி மலையை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்பட உள்ளது. இதனால் ஆக.3,4 ஆகிய 2 நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோவிலில் இன்று(ஆக., 1) முதல் 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும்(01-08-24) அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோவிலில் இன்று(ஆக., 1) முதல் 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும்(01-08-24) அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.