Madurai

News April 2, 2024

மதுரை: அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் நான்

image

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அண்ணாமலை தற்போது கச்சத்தீவு சம்பந்தமாக ஆர்டிஐ தகவல் உள்ளது எனக் கூறுகிறார். இதற்கு ஆர்டிஐ தகவல் தேவையா என்ற அவர், மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே என்றார். அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் நான், அண்ணாமலை எல்லாம் எம்மாத்திரம் என்று ஆவேசமாக பேசினார்.

News April 2, 2024

ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனை!

image

நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் வயது மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று வாக்களித்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

News April 2, 2024

மீண்டும் மோடி பிரதமராவதை தடுக்க வேண்டும்-ரோகிணி

image

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (02.04.2024) நடிகை ரோகிணி தெற்கு வாசல் மார்க்கெட், பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் மீண்டும் மோடி பிரதமராவதை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

News April 2, 2024

மதுரை: பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது

image

மதுரையில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 9 பேரை கீரைத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அழகு, விக்னேஸ்வரன், இளம்பரிதி, பாரத், அப்பு, காமேஷ் ஆகிய 6 பேர் கொண்ட குழுவையும், மணி, கிளி கார்த்திக், செந்தில் முருகன் ஆகிய 3 பேர் கொண்ட குழுவையும் போலீசார் கைது செய்து, அரிவாள் கத்தி, கயிறு போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

மதுரை தேர்தல் அதிகாரியின் புதிய உத்தரவு

image

மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சங்கீதா விடுத்துள்ள அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்காளர்கள் 12 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்கினை செலுத்தலாம் என அறிவித்துள்ளார். அதன்படி ஆதார் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 12 வகையான அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார்.

News April 2, 2024

மதுரையில் கோஷ்டி மோதல், ரவுடி குத்திக் கொலை

image

திருமங்கலம் அருகே செங்குளத்தில் வசிக்கும் ரௌடி முத்தையா, சோழவந்தான் அருகே மேலக்காலில் நிகழ்ச்சிக்கு சென்றபோது, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்தையா தனது நண்பர்களுடன், சித்தார்த்தை சந்திக்க சென்ற போது, மீண்டும் மோதல் ஏற்பட்டு முத்தையா குத்தி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2024

கணித தேர்வில் 1011 பேர் “ஆப்சென்ட்”

image

நேற்று நடந்த 10ம் வகுப்பு கணிதத்தேர்வு மதுரை மாவட்டத்தில் 145 மையங்களில் நடைபெற்றது. 488 பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரத்து 37 மாணவர்கள், 18 ஆயி ரத்து 317 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 522 மாணவர்கள், 489 மாணவிகள் என மொத்தம் 1011 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News April 2, 2024

மதுரை: சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

மதுரையில், வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.56 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

உண்மையை மறைத்தவருக்கு அபராதம் விதித்த ஐகோர்ட்

image

மதுரை சமயநல்லூரை சேர்ந்த ரத்தின செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மருமகள் வீட்டை விட்டு சென்றவர் மற்றோருவரின் சட்டவிரோத காவலில் உள்ளதாகவும், புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நேற்று மனுவை விசாரித்த நீதிபதி, கணவருடன் வாழ விருப்பமில்லாமல் சென்றதை தவறான தகவலளித்து வழக்கு தொடுத்த ரத்தின செல்விக்கு ரூ.25000 அபராதம் விதித்து உத்தரவிட்டது

News April 1, 2024

தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

image

மதுரை மாநகர பேருந்துகளில் தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தானியங்கி ஒலிப்பான் நிறுவும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா இன்று தொடங்கி வைத்தார். அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி ஒலிப்பான் பொறுத்தப்பட உள்ளது.