India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ம.தி.மு.க தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, அமல்ராஜ், புலிசேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.சென்னையில் இருந்து கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இன்று அதிகாலை மதுரை வந்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரையில் உள்ள புதூர், ஆனையூர், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களில் நாளை(ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதூர் துணைமின் நிலையம், ஆனையூர் துணைமின் நிலையம், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை நாளிலும் பத்திரப்பதிவு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 52 சார் பதிவாளர் அலுவலங்களில் ஒரே நாளில் 1465 பத்திரங்கள் பதிவாகின. இதன் மூலம் ரூ.8.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட அதிகம். மேலும், 2024 ஏப்.,1 முதல் நேற்று வரை 99 ஆயிரத்து 732 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.367.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இலங்கை “யாழ்ப்பாண தமிழர்களை போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை கொண்டாடவில்லை” என ஐகோர்ட் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ)சார்பில் வழக்கறிஞர் பிரபுராஜதுரை எழுதியுள்ள நூல் அறிமுக விழாவில் இன்று பேசியவர், “ஆங்கிலம் பிழைப்புக்கான மொழி. ஆங்கில மொழியை தவிர்த்துவிட்டு பிழைப்பு நடந்த முடியாத அளவுக்கு ஆங்கிலம் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டது” என்றார்.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8,9,10,11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்களுக்கு விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள்,பாரம்பரிய நடைபயணம்,உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கம் வளர்த்த மாமதுரை என்ற பாடலை மதுரை எம்பி சு.வெங்கடேசன் தலைமையில்
வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை சுந்தர்ராஜபுரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடமிருந்து 3 வாள்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் அவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க செப்.4க்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், சாலையோர பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி தரப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் யரும் இல்லை. மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை ஆறு, கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் நாம் செய்த சேட்டைகள் பல உண்டு . அந்த வகையில் உங்க நண்பன் பெயர்,அவருடன் நீங்கள் செய்த சேட்டையை கீழே கமெண்ட் பண்ணி, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 929614 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.