Madurai

News April 4, 2024

மோசடி நிதி நிறுவன வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

image

மதுரை மோசடி நிதி நிறுவனம் நியோமேக்ஸ், நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் சார்பாக, மோசடி குறித்து விரைவாக விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டது.

News April 4, 2024

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பேரணி

image

மதுரையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வாகன ஊர்வலம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்தில் திரளான மாற்றுத்திறனாளிகள் டூவீலர்களில் பங்கேற்றனர்.ஊர்வலம் மேலுார் ரோடு, மாநகராட்சி அலுவலகம்,தல்லாகுளம் வழியாக தமுக்கத்தை அடைந்தது.கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா,மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்

News April 4, 2024

பக்கோடா போடச் சொல்லும் பாஜக

image

மதுரை மக்களவை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கனிமொழி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டால் பக்கோடா போடச் சொல்கிறார்கள். யார் கேள்வி கேட்டாலும் அவர்களை நக்சல் என்கிறார்கள். மீறி கேள்வி கேட்டால் அமலாக்கத்துறை ரெய்டு செய்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என அவர் கூறினார்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

மீனாட்சி அம்மன் கோயிலில் அமித் ஷா தரிசனம்

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணிக்கு மதுரை வருகிறார். தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கிவிட்டு நாளை காலை 9 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர், சிவகங்கையில் நாளை காலை 10 மணிக்கு அமித் ஷா ரோடு ஷோ செல்கிறார். அதேபோன்று நண்பகல் 12 மணிக்கு தென்காசியில் ரோடு ஷோ நடத்த உள்ளார். குமரியில் நாளை மாலை 4 மணிக்கு பிரச்சாரம் செய்வார்.

News April 4, 2024

தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம்

image

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படும் நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை செய்யும் தனி தனிஅரங்குகள், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

News April 4, 2024

தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம்

image

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படும் நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை செய்யும் தனி தனிஅரங்குகள், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

News April 4, 2024

மதுரை:சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் படிக்கட்டுகள்

image

கடந்த சில ஆண்டுகளாக, மதுரை சித்திரைத் திருவிழாவில், தண்ணீரில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் சிலா் உயிரிழந்தனா். இதை தடுக்க, 2023ம் ஆண்டு காவல் துறை சாா்பில் தற்காலிக படிகள் அமைக்கப்பட்டன. தற்போது, மதுரை மாநகராட்சி சாா்பில் வைகையாற்றில், ’நமக்கு நாமே திட்டத்தில்’ ரூ. 50 லட்சத்தில் ஆழ்வாா்புரம், ஓபுளா படித்துறை பகுதிகளில் நிரந்தர படிக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News April 3, 2024

மதுரை: சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம்

image

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் 1-9 ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல்.23-ஆம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 24-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23இல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 3, 2024

வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

image

ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மார்ச் மாதம் வரை வியாழக்கிழமைகளில் சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 25 வரை வியாழக்கிழமைகளில் இயங்கும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.