India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 5.63 ஏக்கர் இடத்தில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 12 தளங்களை கொண்ட டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கான இ- டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. www.tntenders.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் டெண்டர் எடுக்கும் நபர்கள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று(ஆக.,6) காரில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுடன் சென்ற சங்கரன்கோவிலை சேர்ந்த விஷ்ணு சங்கர்(35), தங்கராஜ்(42), சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சீமைசாமி(56), கோபாலகிருஷ்ணன்(33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், மதுரை பேரையூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து கள்ளநோட்டு அச்சடித்தது தெரியவரவே அங்கு போலீசார் அதிரடி ஆய்வு நடத்தி அச்சடித்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே முத்தனம்பட்டி கிராமத்தில் உள்ள மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று(6-8-24) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட செயலாளரை சந்தித்து நலம் விசாரித்தார்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமுறைகளை மீறி உரிய வரைபட அனுமதி இல்லாமல் 2 அடுக்கு 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள 1,869 கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று (ஆக.06) உத்தரவிட்டுள்ளது. விதிமீறி கட்டப்பட்ட கட்டட உரிமையாளர்கள் வரைபட அனுமதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ரத்தினவேலு விடுத்துள்ள அறிக்கையில், “அரிசி, கோதுமை, பருப்பு, மைதா ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிப்பதில் குழப்பம் நிலவுகிறது. கோதுமையை வேளாண் பொருளாகவும், அரிசியை ஆலையில் தயாரிக்கும் பொருள் என்ற அடிப்படையிலும் வரி விதிப்பதை ஏற்க முடியாது. இதைத் தவிர்க்க அனைத்து உணவுப் பொருட்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட நூலகத்தில் வாசகர்களுக்கு தேவையான ஆண் பெண் கழிவறை, குடிநீர், இணையதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று (ஆக.06) விசாரணைக்கு வந்தபோது, நூலகத்தை பராமரிக்க 97 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று(ஆக.,5) காரில் வந்த மதிமுக நிர்வாகிகள் பச்சமுத்து, அமிர்தராஜ், புலிசேகர் ஆகியோர் மேலூர் சுங்க சாவடி அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், முறையாக லாரியை நிறுத்தாததே விபத்துக்கு காரணம் என திருச்சி தொட்டியத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரை(37) இன்று மேலூர் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு குற்றங்களில் சம்பந்தப்பட்ட 54 வாகனங்களின் ஏலம் மாவட்ட எஸ்பி அர்விந்த் தலைமையில் ஆக.10 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் வாகனங்களை பார்வையிட்டு, இருசக்கர வாகனத்திற்கு ரூ.5,000, 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆக.8, 9 ஆம் தேதியில் செலுத்தி ரசீது பெறலாம்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசை சங்க பொன்விழாவை முன்னிட்டு, கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு “முத்தமிழ் பேரறிஞர் விருதை” அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வழங்கினார். விருதை பெற்றுக் கொண்டு பேசிய வைரமுத்து, “கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, உ.வே.சா போன்றோருக்கு வழங்கப்பட்ட விருதை, நானும் பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று கூறினார். உங்களுக்கு பிடித்த வைரமுத்துவின் பாடல் எது?
மதுரை மாநகர காவல்துறையின் துப்பறியும் நாய் படை பிரிவில் வெடிகுண்டு, போதைப்பொருட்கள், குற்றங்கள் போன்றவற்றை கண்டறிய 8 நாய்கள் உள்ளன. தற்போது நி100 நாட்கள் ஆன ‘லேபர் டாக் ரெட் ரிவர்’ இனத்தைச் சேர்ந்த நாய் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பறியும் நாய்க்கு காவல் ஆணையர் லோகநாதன் ‘அழகர்’ என பெயர் சூட்டினார். மேலும் 6 மாத கால வெடிகுண்டு பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.