India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தாமதம் தொடர்ந்தால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை ஐகோர்ட் எச்சரித்துள்ளது. மதுரை பாஸ்கரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,எய்ம்ஸ் கட்டுமான பணியில் மத்திய சுகாதார துறையின் நடவடிக்கை மிக மோசமாக உள்ளதாகவும், இறுதியாக பணி எப்போது முடியும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை எய்ம்ஸ் திட்ட இயக்குனர், நிதித்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவிடம் கடந்த பிப்ரவரி மாதம் அபிநயா என்ற பெண், தன் கணவரை பிரிந்த நிலையில் திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கிய 95 சவரன் நகையை அவரிடமிருந்து பெற்றுத்தர புகார் அளித்தார். இதையடுத்து அவரிடமிருந்து பெற்ற நகையை ஆய்வாளர் கீதா தனது சொந்த தேவைக்காக அடமானம் வைத்த விவகாரத்தில் ஏற்கனவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு வீரர்கள் நல சங்கம் சார்பில் மதுரை எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானத்தில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி விரைவில் நடைபெற உள்ளது. எனவே, இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பள்ளிகள் 9003461505 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பைக்கரா பகுதியில் உள்ள திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான கோ.தளபதி வீட்டு முன்பாக திமுக பிரமுகரான மானகிரி கணேசன் என்பவர் இன்று(ஆக.,29) காலை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட்கட்சி பிரச்னை தொடர்பாக தளபதிக்கு எதிராக முழக்கமிட்டபடி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் கோச்சடை- மதுரை, திருநெல்வேலி, தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்கள் போடி, இராமநாதபுரம், விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மையங்களில் நாளை (ஆக.30) ஒருநாள் மட்டும் பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது. எனவே பொதுமக்கள் நாளை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக சி.பி.ஐ.,பதிந்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று மீண்டும் இருதரப்பு வாதத்தை ஏற்று நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்குமா? அல்லது முன் ஜாமீன் வழங்க மறுக்குமா என்பது இன்று பிற்பகலில் தெரியவரும்.
மதுரை மாவட்டத்தில் 490 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம், ஒரு பயிர்’ திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள், நன்மை செய்யும் பூச்சிகளை அறிந்து கொள்ளவும், தீமை செய்யும் பூச்சிகளை அறிந்து ‘கொல்லும்’ வகையிலும் நிரந்தரப் பூச்சி கண்காணிப்பு திடல்கள், வயல்களில் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் 5 முதல் 10 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கத் திடல் அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) ராஜேஸ்வரி TPS, நேற்று (28.08.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு மதுரை இடையப்பட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக பணியாற்றி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று தற்போது துணை ஆணையராக மதுரை மாநகர காவல்துறைக்கு பொறுப்பு ஏற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது, அங்கீத் திவாரி நிபந்தனை ஜாமீனை தளர்த்தக் கோரி, தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டதால், வழக்கை 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
மகாத்மா காந்தி 1921ல் மதுரைக்கு வந்தபோது அவர் மேலமாசி வீதியில் தங்கியுள்ளார். அப்போது தனது அறையிலிருந்து வெளியில் பார்க்கும்போது பலரும் மேலாடையின்றி இருப்பதைக் கவனித்துள்ளார். அன்றிலிருந்து அவர் அரை ஆடைக்கு மாறினார். அடுத்த நாள் அவர் மதுரையில் முதன்முறையாக உரையாற்றிய இடம் இன்றளவும் காந்தி பொட்டல் என்று அறியப்படுகிறது. காந்தி காலத்திலேயே அரசியலில் மதுரை முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
Sorry, no posts matched your criteria.