India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை உத்தபுரத்தில் ஜாதி பிரச்னையால் மூடி வைத்துள்ள கோயிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி பாண்டி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவற்றை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக்கூடாது எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி பாலம் அருகே இன்று(ஆக.,9) காலை அரசுப் பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் சென்ற திருப்பத்தூரை சேர்ந்த 2 வயது குழந்தை சிவானிக்கா, சௌவுந்தர்ராஜ்(40) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த மேலும் 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் & சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள தனியார் சர்வதேச பள்ளியில் இன்று மதுரை மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ மாணவியர் கலந்து கொண்ட நிலையில், வல்லபாய் வித்யாலயா பள்ளி மாணவிகள் 41 கிலோ எடைப்பிரிவில் ராகவி, 47 கிலோ எடைப்பிரிவில் வைஷ்ணவி, 33 கிலோ எடைப்பிரிவில் நந்தினி ஸ்ரீ உள்ளிட்டோர் 6 தங்கம் உள்ளிட்ட 11 பதங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதை பராமரிப்பு காரணமாக வரும் 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் (நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் வழியாக) திருநெல்வேலி மற்றும் புனலூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 13,16 ஆகிய தேதிகளில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் புனலூர் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையில், பொது மக்களின் நலன் கருதி சாலைகளில் சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுபடுத்த ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்குவது அவசியமாகிறது என கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நாய்களுக்கு காதில் மட்டும் ஓட்டை போட்டுவிட்டு, கருத்தடை செய்ததாக கணக்கு காட்டுவதா என தமிழக அரசை கேள்வி எழுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் நகராட்சி பகுதி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள், சிறுவர்கள், பேருந்து பயணிகள் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உரிய அறிவுரை வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை விராதனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவரது தாய் சரோஜாவுக்கு சொந்தமான இடம் திருமங்கலம் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை தனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு நேற்று மணிகண்டன் தாய் சரோஜாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாயைக் கொன்ற மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.