India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக மதுரையிலிருந்து ஏப்ரல் 17, 18ம் ஆகிய தேதிகளில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு சராசரியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக (09-04-24) அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் மீது பதியப்பட்ட பொய் கஞ்சா கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை காவல் ஆய்வாளர் பூமிநாதன், எஸ்ஐ பேரரசி ஆகியோர் நேர்மையாக நடத்தவில்லை, காவல்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகிறது என்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை வேளாண்மை கல்லூரியின் பூச்சியியல் துறை இணை பேராசிரியா் கி.சுரேஷ் கூறியதாவது, வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் தேனீ வளா்த்தல், தேன் எடுத்தல், தேனிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 10 நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ரூ.590. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் 9965288760 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா அறிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பூத் அலுவலர்கள் ஏப் 13ல் நடக்கும் பயிற்சி முகாமில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏப்.,15 வரை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில் தபால் ஓட்டுக்களை வழங்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஏப்.10 கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது. அங்கு அவர்களுக்கு ஓட்டுச் சீட்டும் வழங்கப்பட்டு, உடனடியாக ஓட்டுக்கள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மீனாட்சி திருக்கல்யாண விழா வரும் ஏப்.21ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. திருக்கல்யாண விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ. 200, ரூ.500க்காண கட்டணச்சீட்டு நாளை முதல் ஏப்.13ம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைனில் பெறலாம். இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in மூலம் பெற்றுக்கொள்ளலாம்
மதுரையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மதுரையில் சில நாட்காகவே 103 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. மேலும், வெப்பசலனம் காரணமாக அடுத்த 6 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருமங்கலம் கக்கன் காலனி ஓடை அருகே ஒரு பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்தபோது வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கடந்தது. விசாரணையில் அவர் சுந்தர்(38) கடந்த 8 ஆண்டுகளுக்காக மனைவியை பிரிந்து வாழ்கிறார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாஜகவில் தலைவர் பஞ்சம் ஏற்பட்டதால் ரெடிமேடாக அண்ணாமலை தலைவராக நியமிக்கட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு செல்லும் மற்ற கட்சிகள் அனைத்தும் இரும்பு கடைக்கே செல்லும் என அண்ணாமலை கூறிய கருத்திற்கு இன்று ஆர்.பி.உதயகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.