India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பவுண்டேஷன், இளம் மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார். 450 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. மதுரையை பசுமையாக்கும் முயற்சியாக அதிக மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் மாணவருக்கு ரூ 1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பார்வை பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன் தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தன்னார்வலர்களை உணவு வழங்க விடாமல் தடை செய்யப்பட்டதன் பின்னணியில் நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தின் தலையீடு இருப்பதாக பொதுமக்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தன்னார்வலர்கள் வழங்கும் உணவால் இந்த உணவகத்தில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் அம்மன் உணவகத்தின் தலையிட்டால் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை-பெங்களூர் ரயிலில் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ. 440, திருச்சிக்கு ரூ. 555, கரூருக்கு ரூ. 795, நாமக்கல்லிற்கு ரூ. 845, சேலத்திற்கு ரூ. 935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ. 1555, பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கு ரூ. 1575 கட்டணமாக நிர்ணயிக்க பட்டுள்ளது.இதே ரயிலில் உயர்வகுப்பு மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ. 825, திருச்சிக்கு ரூ. 1075, பெங்களூரு ரூ. 2865 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண், பெண்கள் இணைந்து பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக உள்ளக குழு (இன்டர்னல் கமிட்டி) அமைக்க வேண்டும். இக்குழுவை அமைத்து அதனை சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த நிறுவனங்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
கைதிகள் நெரிசலால் மதுரை மத்திய சிறைக்கு பதிலாக மாற்று இடம் கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலர், சிறைத்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலைஞரின் அனைத்து வேளாண் திட்டத்தின் கீழ் ரூ.13.72 லட்சத்தில் 30,500 மரக்கன்றுகள், ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ் 25.68 லட்சத்தில் 17,120 கன்றுகள் வழங்கப்பட உள்ளது. வாழை, முருங்கை, கருவேப்பிலை போன்ற தொகுப்பு ரூ.45க்கும், சப்போட்டா, கொய்யா, நெல்லி, பப்பாளி தொகுப்பு ரூ.150க்கும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என துணைஇயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதியுடையோர் வரும் 30.09.2024 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்த மதுரையை சேர்ந்த தீபன், கவுசல்யா தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க இன்று ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தங்களை பெற்றோர் கொல்ல முயற்சிப்பதாகவும், பாதுகாப்பு கோரியும் கவுசல்யா ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், பாதுகாப்பு கோரி சம்பந்தப்பட்ட போலீசாரை அணுகி தம்பதியினர் மனு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் நிபந்தனையை சற்று தளர்த்தி இன்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தனது ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பு வாதத்தை ஏற்று வாரம் ஒருமுறைக்கு பதில் 2 வாரத்துக்கு ஒருமுறை கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- வணிக வரித்துறையில் ரூ. 1,42,000 கோடி, பதிவுத்துறைக்கு ரூ.23,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டு ரூ.4,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நியாயமாக தொழில் செய்ய வேண்டும். மக்கள் செலுத்தும் ஜி.எஸ்.டி.,யை அரசுக்கு நேர்மையான முறையில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.