India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் சர்வதேச அளவில் முதலீடு செய்வதாக 96 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த வாரம் ஏற்கனவே 6 பேரை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மதுரை மேலூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், தெற்கு வாசலைச் சேர்ந்த சுல்தான் அப்துல் காதர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பிராமண சமுதாய மாநாட்டில் தெலுங்கு சமுதாய மக்களை தவறாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார். மதுரையில் தாக்கலான இந்த வழக்கில் ஆஜராவதற்காக நாளை (நவ.18) மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு பேருந்தில் அழைத்து வரப்படுகிறார்.
மதுரை, விமான நிலையத்திற்காக நிலத்தை கையகப்படுத்துதல் குறித்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மற்றும் அமைச்சர் உடனான பேச்சுவார்தை தோல்வி அடைந்த பின், நேற்று(நவ.16) சின்னஉடைப்பில் மின்தடை செய்யப்பட்டது. மக்கள் தற்போது அதிகாரிகளை ஊரின் உள்ளே நுழைய விடாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கிராம மக்களுடன் கோட்டாட்சியர், தாசில்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பழைய விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.17) பெருங்குடி அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் நிலத்தினை கையகப்படுத்த அதிகாரிகள் வரவுள்ள நிலையில் காலை முதல் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் பகுதியில் ஸ்பா உள்ளது. இங்கு, பாலியல் தொழில் நடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், அங்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது, அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை மீட்ட போலீசார், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடவைத்த ஒரு பெண், 2 ஆண்களை கைது செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7 ஆம் நாளான இன்று (16.11.2024) மீனாட்சி சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் உலா வந்தனர். இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் நகரைச் சேர்ந்தவர் தனவல்லி. ஆட்டோ ஓட்டுனரான இவரது மகன் முத்துக்குமாருடன் (23) சேர்ந்து பனியன் கம்பெனி நடத்தி அதில் தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடன் தொல்லை அதிகரித்த நிலையில், பூர்வீக வீட்டை விற்க ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த முத்துக்குமார் நேற்று (நவ.15) இரவு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று (நவ.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் திமுக அரசைக் கண்டித்து இன்று (நவ.16) முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆனால் இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்கவில்லை என்பது பேசுபொருளாகியுள்ளது.
மதுரை அச்சம்பத்து பகுதியில் இரவு நேரங்களில் குரங்கு குல்லா மற்றும் டவுசர் அணிந்த கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 4 முதல் 5 பேர் கொண்ட கும்பலாக உலா வருவதாகவும், கடத்தாண்டு இது போன்ற கும்பல் மூலமாக இப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் இரவில் உலா வரத் துவங்கி உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.