India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 04.09.2024 புதன்கிழமை மதுரை நெல்லியேந்தல்பட்டியில் (வேளாண் கல்லூரி அருகில்) நடைபெற உள்ளது. இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் பராமரித்தல் பற்றி விவசாயிகள் அறிந்துக் கொள்ளலாம் என ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இந்நிலையில் ஆளுனரின் கருத்து குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,
புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு என விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 57.6% சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியுள்ளதால் இங்கு அதிக கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கொத்தனார் முருகன் 45. அப்பகுதியை சேர்ந்த வாய்பேச முடியாத 13 வயது சிறுமியை, வீட்டிற்குள் அழைத்து சென்று தவறான நோக்கத்தில் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உடனே கூச்சலிட்ட சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அவரது தந்தை அவரை மீட்டார். தப்பிச் சென்ற முருகனை ‘போக்சோ’ வழக்கில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.
ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,5ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக மாநில செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் செல்லத்துரை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக ரேஷனில் வழங்க வேண்டும், வேறு மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
மேலூர் அருகே தெற்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தவமணி(36) தனது ஆட்டோவில் பயணிகளுடன் குறிஞ்சி நகர் பஸ் ஸ்டாப் அருகே இன்று நிறுத்தி விட்டு டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது சென்னை, திருச்சியில் இருந்து வந்த 2 அரசு பஸ்கள் ஒன்றை ஒன்று முந்த முயன்ற போது ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த பரமேஸ்வரி, பிரேமா, லட்சுமி, சிறுவன் ஹரீஷ் உட்பட 6 பேர் காயமடைந்தனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்காக இன்று காவலர்களின் குழந்தைகள் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அங்கு வந்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாணவர்களுக்கு பயிற்சிகள் குறித்தும், செயல் பட வேண்டிய முறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் மாணவர்கள் வெற்றி பெற தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நாளை மறுநாள் (செப்.3) தெற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், மண்டல தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் அனுமதி மறுக்கப்பட்டது, நடிகை நமிதாவை மாற்று மதம் என்ற குளறுபடியால் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களின் எதிரொலியாக இன்று தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர் புஷ்பராஜ் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது தவழும் மாற்றுத்திறனாளிகளையும் கோவிலுக்குள் அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வாடிப்பட்டி தேனூர் கெங்காமுத்தூர் பெரியகருப்பன் மனைவி கருத்தபிள்ளை 56 கணவர், மகனுடன் தினமும் சாத்தையாறு அணை பகுதியில் உள்ள சொந்தத் தோட்டத்தில் வேலை செய்ய சென்ற போது கடந்த 29ஆம் தேதி மாலை தோட்டத்தில் வலது கையில் விஷ பூச்சி கடித்துள்ளது. இதனால் வாடிப்பட்டி அரசு மாதிரி முதலுதவி செய்த பின்பு மதுரை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.