India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீரர் நிதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட நிதீஷ் குமார் திரில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இந்திய விளையாட்டு ஆணைய பாரா பேட்மின்டன் முதுநிலை பயிற்சியாளரான மதுரையை சேர்ந்த பத்ரி நாராயணன், நிதிஷ்குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் உள்ள பலருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று உத்தரவிட்டது. மதுரை சக்கிமங்கலத்தில் தகுதியற்ற நபர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய கோரிய மனுவில், இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருமங்கலம் தாலுகா கூடக்கோவிலை சேர்ந்தவர் கருப்பசாமி 35, இவர் கூடக்கோவிலில் சலூன் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர் கல்லணைக்கு வேலை தொடர்பாக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கருப்பசாமி கல்லணை கண்மாய் கரையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரையில் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க 5 ஆண்டுக்கு முன்பு வழக்குகளில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை, விவரங்களை காவல் துறையினர் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே குற்றச்செயல்கள் புரிந்தவர்களின் வகைப் பட்டியலின் அடிப்படையில் கண்காணிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுவோர், ஜாமினில் வருவோரும் தொடர்ந்து சிறப்பு காவல் குழுவினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.150 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ரயில்வே துறை தொடர்ந்து ரயில் பயணத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீரர் நிதீஷ்குமார் தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட நிதீஷ் குமார் திரில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு பயிற்சி வழங்கிய இந்திய விளையாட்டு ஆணையம்
பாரா பேட்மின்டன் முதுநிலை பயிற்சியாளரான மதுரையை சேர்ந்த பத்ரி நாராயணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரசாதம் வழங்கும் இந்து அறநிலையத்துறை பிரசாதங்களை விற்பனை செய்ய ஏன் தனியாரை அனுமதிக்கிறது என்று தெரியவில்லை என மதுரை ஐகோர்ட் அதிர்ப்தி தெரிவித்துள்ளது. அறநிலையத்துறையே தரமான முறையில் பிரசாதங்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம். பிரசாத கடைகளை வணிக நோக்கில் தனியாருக்கு குத்தகைக்கு விடும் கோவில் நிர்வாகம் பிரசாதத்தின் தரத்தினை எவ்வாறு உறுதி செய்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், மதுரை நகரம் தலா 102 ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதுரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், தொடர்ச்சியாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவை அதிகரித்துள்ள நிலையில், மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இலங்கை விமான சேவை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 04.09.2024 புதன்கிழமை மதுரை நெல்லியேந்தல்பட்டியில் (வேளாண் கல்லூரி அருகில்) நடைபெற உள்ளது. இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் பராமரித்தல் பற்றி விவசாயிகள் அறிந்துக் கொள்ளலாம் என ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
Sorry, no posts matched your criteria.