India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது. கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மதுவில்லா ஊராட்சியாக மாற்றவும், உயிரி பல்வகைமை மேலாண்மை குழுவை அமைத்து ஊராட்சியின் வளங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில், 78வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விசுவநாதன் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இதேபோல் விமான நிலைய இயக்குநர் முத்துகுமார் தேசிய கொடியேற்றினார். பின் விமான நிலையத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியினை மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று(ஆக.,15) ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்பாண்டிச்செல்வி , கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் நாளை(ஆக.,16) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கருத்துகள், குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரை உத்தப்புரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் வழிபடுவதில் இரு சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 10 ஆண்டுக்கு முன் மூடப்பட்ட கோயில், மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இக்கோயில் பகுதியில் நேற்று(ஆக.,14) ஆய்வு செயத SP அரவிந்த், அனைத்து தரப்பு மக்களும் வழிபடுவதில் பிரச்னை இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு டிஎஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளார்.
விராலிப்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது என ஏற்கனவே போட்ட கிராமசபை தீர்மானத்தை மதிக்காமல் குவாரியை அமைக்க முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகளை கண்டித்து இன்று (ஆக 15) நடைபெற உள்ள கிராம சபையை புறக்கணிப்பதாக அறிவித்து, நேற்று நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். கடந்த 6ஆம் தேதி வாடிப்பட்டியில் நடந்த கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
பயணிகளின் வசதிக்காக மதுரையிலிருந்து பீகார் மாநில முசாப்பர்பூருக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை – முஸாப்பர்பூர் ஒரு வழி சிறப்பு ரயில் (06114) மதுரையில் இருந்து ஆகஸ்ட் 18 அன்று இரவு 07.05 மணிக்கு புறப்பட்டு ஆகஸ்ட் 21 அன்று அதிகாலை 02.45 மணிக்கு முஸாப்பர்பூர் சென்று சேரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறுவதாக எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,எய்ம்ஸ் முதல்கட்ட கட்டுமான பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும், கட்டுமான பணியில் எந்தவித சுணக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய சுகாதாரத்துறை தேவையான நிதியை வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள 420 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Sorry, no posts matched your criteria.