India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(60). இவர் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு சாலை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாமிநாதன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை புறநகர் ஆனையூர் பகுதியில் நேற்று அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, “சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் பெற்றுக்கொண்டு தொடர்ந்து அவர்களை தி.மு.க. வஞ்சித்து ஏமாற்றி வருகிறது” என விமர்சித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு வினியோகம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருக்கல்யாணத்தை காண 200, 500 ரூபாய் என இரண்டு சிறப்பு கட்டண சீட்டு அனுமதிக்கப்பட உள்ளது. சிறப்பு கட்டண சீட்டுகள் பெற மதுரை மேலச்சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுத்த ஒப்பந்தங்களை ரத்து செய்து, குறிப்பிட்ட சமூக மக்களுக்கு, தூய்மை பணி மற்றும் கழிப்பிட ஒப்பந்தங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கொடுங்கள் என்று எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்
மதுரையில் இன்று 16.04.2024) மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில்
சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்திடவும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
மதுரை காந்தி மியூசியத்தில் வரும் ஏப். 26ஆம் தேதி காலை 11:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுயவேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இதில் பெருங்காயம், ஸ்குவாஷ், ரோஸ்மில்க், வெங்காய வடகம், பதப்படுத்தப்பட்ட நெல்லிக்கனி சாறு முதலியன தயாரிக்க செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு 98657-91420 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா பட்டாபிஷேக விழாவில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? கணவனை இழந்தவர் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
டிரைவர் சம்பளம், இறக்கு கூலி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த 3ஆம் தேதி முதல் கேஸ் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முதல் மதுரை, துாத்துக்குடி பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், ஏழு பிளான்ட்களில் இயங்கி வந்த, 500 லாரிகளை நிறுத்தியதால், மதுரை, துாத்துக்குடி, ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கூடங்கள் 17.04.2024 அன்று காலை 10 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) இரவு 12 மணி வரை மற்றும் 21.04.2024 (மகாவீர் ஜெயந்தி) ஆகிய தினங்களில் மதுபான கடைகள் மூடப்படும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மேலும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரியை கையில் ஏந்தி எப்படி வாக்கு சேகரித்த அவர் தனக்கு வாக்களிப்பவர்கள் எந்த எண்ணில் உள்ள சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களிடம் விளக்கம் அளித்து வாக்கு சேகரித்தார்.
Sorry, no posts matched your criteria.