Madurai

News April 18, 2024

359 இடங்கள் பதற்றமானவை

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்காக மதுரை மாவட்டத்தில் 2,751 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 359 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இம்மையங்களில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு, தேர்தல் நுண் பார்வையாளர்கள், வெப் காஸ்டிங் முறை ஆகியவை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

ரயில் விபத்தை தவிர்க்க வந்தாச்சு புதிய “கருவி”

image

மதுரை கோட்டத்தில் 316.65 கிமீ தூர திருச்சி முதல் நெல்லை வரை உள்ள ரயில் நிலையங்களில் விபத்தை தடுப்பதற்காக ‘கவச்’ என்ற பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாகச் சென்றால் 5 நொடிகள் எச்சரிக்கை மணி ஒலி எழுப்புகிறது. அதற்குப் பிறகும் வேகம் குறையவில்லை என்றால் தானாக பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்த செய்கிறது.

News April 18, 2024

நம்ம மதுரை: இது நம்ம தொகுதிகள்

image

தமிழ்ச்சங்கம் வளர்த்த நகரம் நம் மதுரை. அத்தகைய நமது மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் என 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில், மதுரை தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூரும், தேனியில் உசிலை, சோழவந்தானும், விருதுநகரில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.

News April 18, 2024

மதுரையில் வெளுத்து வாங்கும் வெயில்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. இதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 18, 2024

வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் தீவிரம்

image

மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளிலிருந்து அரசியல் கட்சியினர் 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை வலியுறுத்தும் வகையில் மதுரை மேல வெளி வீதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வரும் சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று பெயிண்டால் அடையாளபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 18, 2024

 பெண்ணை மானபங்க படுத்திய 4 பேர் கைது

image

கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரபீலா பேகம்(35). இவர் சையது பானு என்பவரிடம் ரூ 20,000 கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் அசலை கொடுத்த பிறகும் மேலும் பணம் கேட்டு சையது பானு நேற்று தகராறு செய்து, ரபீலா பேகத்தின் சேலையை நடு ரோட்டில் இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரில் கொட்டாம்பட்டி போலீசார் சையது பானு, ஆயிஷா பீவி யாஸ்மின் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

News April 17, 2024

நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

மதுரை, மணியாச்சியைச் சேர்ந்தவர் நாகம்மாள்(70). இவர் நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் நின்றபோது 60-வயது மதிக்கத்தக்க ஒருவர், முதியோர் உதவித் தொகை வாங்கித்தருவதாக கூறி நாகம்மாளை நம்ப வைத்து போட்டோ ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்றார். செயின் அணிந்தால் கிடைக்காது என சொல்லி கழுத்தில் அணிந்திருந்த செயினை கழட்டி பர்ஸில் வைக்க சொல்லினார். புகைப்படம் எடுத்தபோது முதியவர் பர்ஸை திருடி சென்றார்.

News April 17, 2024

மதுரை: தகராறில் மண்டையை உடைத்த 5 பேர் கைது

image

திருமங்கலம் அருகே கரிசல்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராம்குமாருக்கும் வீட்டின் கழிவுநீர் செல்வதில் தகராறு இருந்து வந்தது. இன்று இத் தகராறு முற்ற ராஜ்குமார், சரவணக் கண்ணன், சுப்புலட்சுமி, கவிதா, அழகுராணி ஆகியோர் சேர்ந்து கட்டையால் வீராச்சாமியின் மண்டையை உடைத்தனர். திருமங்கலம் போலீசார் 5 பேரையும் இன்று கைது செய்தனர்.

News April 17, 2024

மதுரை: ராதிகா ரூ.15 கோடி வரிபாக்கி

image

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராதிகா சரத்குமார் சுமார் 6 கோடியே 54 லட்சம், அவரது கணவர் சரத்குமார் 8 கோடியே 48 லட்சம் ரூபாயும், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்கள். அதனால் தான் அவர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

News April 17, 2024

பாஜக பொருளாதார அறிவு இல்லாத கட்சி – அமைச்சர் தாக்கு

image

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் சு. வெங்கடேசனுக்கு வாக்குகள் கேட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “பாஜக ஒரு பாசிச கட்சி. பொருளாதார அறிவு சற்றும் இல்லாத கட்சி. இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால், பாகிஸ்தானை விட மோசமான பொருளாதார நிலைமைக்கு இந்தியா சென்று விடும்” என கூறினார்.