India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நாளை (ஆக.20) நடைபெற உள்ளது. எனவே மண்டலம் 3 க்குட்பட்ட வார்டு பகுதி மக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆக.23 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் & நகல்), ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நாணயம் வெளியீடு நிகழ்ச்சி மூலம் பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக உள்ளது நிருபனமாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். கட்சி நிகழ்வில் பேசிய அவர், கலைஞர் நாணயத்தில் ஹிந்தி மொழி பொறிக்கப்பட்டுள்ளது. ஹிந்து ஒழிக என 75 ஆண்டுகள் முழக்கமிட்ட திமுக குரல் இன்றைக்கு சமாதி ஆக்கப்பட்டுள்ளது. இனி ஹிந்தி ஒழிக என்று திமுக கோஷம் போட்டால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் சிபிஎஸ்இ மற்றும் மாநில பள்ளிகளில், 3000 தகுதியுள்ள SC மாணவர்கள் ஸ்ரேஸ்டா (NETS) என்ற தேசிய நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். ஸ்ரேஸ்டா தேர்வு பற்றி மாநில மொழியில் விழிப்புணர்வும், விளம்பரமும் செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு கர்நாடகாவிற்கு ரூ.1448 கோடி ஒதுக்கிய ரயில்வே துறை தமிழகத்திற்கு ரூ.301 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஆனால் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவிற்கு ரூ.2286 கோடி அறிவித்துவிட்டு இப்போது ரூ.1448 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தெற்கு இரயில்வேக்கு ரூ.971 கோடி அறிவித்து ரூ.301 கோடி மட்டுமே தந்துள்ளதாக மதுரை எம்பி வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: தாம்பரம் – செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக் காரணங்களால் இன்று இரவு 9 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பரவையை சேர்ந்த சிறப்பு திறனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டில் சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த சமயநல்லூர் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட வடுகபட்டியை சேர்ந்த கார்த்திக் கண்ணனை (33) நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை, உசிலம்பட்டி அதிமுக நகராட்சி தலைவர் சகுந்தலாவின் மகன் விஜய், பள்ளி நடத்தி வரும் கவிதா என்பவரிடம், மேல்நிலை பள்ளி அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, அரசு அதிகாரிகள் பெயரில், ரூ. 1 கோடியே 40 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். கவிதா கொடுத்த புகாரின் பேரில், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சகுந்தலாவின் மகன் விஜயை கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாநகராட்சி பில் கலெக்டர்களை ஆணையாளர் தினேஷ்குமார் ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். கடந்த 2022, 2023 ஆம் ஆண்டில் முறைகேடு நடந்துள்ளதும், இதனால் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ராமலிங்கம், ராமச்சந்திரன், மாரியம்மாள் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக மதுரை துவரிமான் – மேலக்கால் சந்திப்பு உள்ளது. துவரிமான் சந்திப்பில் உயர் மட்ட மேம்பாலமும், சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மதுரை எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று பாலம் அமைக்க ரூ. 46.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.