India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்த முனீஸ் பாண்டி என்ற இளைஞர் நேற்று வாக்கு செலுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு அவரது வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது, ஏற்கனவே அவரது வாக்கினை பெண் ஒருவர் செலுத்தி இருந்ததை கண்டு இளைஞர் முனீஸ் பாண்டி அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் இளைஞர் தன் காதில் பூ வைத்துக்கொண்டு நூதன முறையில் தான் ஏமாற்றப்பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மதுரை மக்களவை தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்களிக்க காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 7 மணி வரை வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது. இன்று 68.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், கடந்த தேர்தலில் ஒப்பிடுகையில் 1.11 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர் லீலா(99). இவர் வேறு பகுதியில் உள்ள மகள் வீட்டில் உள்ளார். தனது தொகுதிக்கு சென்று ஓட்டு போட விரும்பிய இவர், தமது மகள் மூலம் அமைச்சர் பிடிஆர்-க்கு இன்று கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்பட்ட லீலா பாட்டி, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
மதுரை அம்பிகா கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், இயக்குநர் அமீர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் அமீர், ‘ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது வாக்கு தான். வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை. அந்த வகையில் என்னுடன் வாக்கை நான் செலுத்தி விட்டேன்’ என்றார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்களித்த ஒருவர் அதனை போட்டோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் ஞான ஒளி புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பட்டிமன்ற நடுவர் மற்றும் பேராசிரியர் சாலமன் பாப்பையா தனது குடும்பத்துடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்கினை செலுத்தினார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றிய அலுவலக சாலமன் பாப்பையா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை விழாவில் முதன்முறையாக பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் சித்திரை திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 மற்றும் 0452-2526888 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் வரும் மே 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதலிடம் பெரும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. எனவே பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் வரும் மே 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்துடன் மதுரை மீனாட்சி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். தனது மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்துடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றிய செல்லூர் ராஜூ, அதிமுக கூட்டணி நிச்சயம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று காலை முதல் துவங்கி மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடியில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், இன்று காலை மதுரை கண்ணனேந்தல் உள்ள சேவியர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தனது வாக்கினை செலுத்தினார்.
Sorry, no posts matched your criteria.