India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று(ஆக.,22) இரவு 7 மணி வரை நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த உயர்மட்ட குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை என மதுரையை சேர்ந்த மயில்சாமி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்மட்டக் குழு என்பது ஒரு விஷயத்தை நீர்த்துப் போகச் செய்வதுதான் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும். இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார்
கொடுக்களாம் என காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்க மாவட்ட மேலாண்மை அலகு, அலுவலகத்தில் 5 சமுதாய அமைப்பாளர் காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பங்கள், இதர விவரங்களை madurai.nic.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு ஆக.30 க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை கல்வி மாவட்ட அலுவலராக (டி.இ.ஓ.,) இந்திராணி மற்றும் தனியார் பள்ளி டி.இ.ஓ.,வாக சுதாகர் நியமிக்கப்பட்டனர். இதற்கு முன்னதாக இந்திராணி விருதுநகர் மாவட்டத்திலும், சுதாகர் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மதுரை தொடக்க கல்வி டி.இ.ஓ., சுப்பாராஜூ விருதுநகர் தனியார் பள்ளி டி.இ.ஓ.,வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தேனி பழைய கோட்டை பஞ்சாயத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேற்று (ஆக.21) இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம் என தோன்றுகிறது. அந்த அளவிற்கு 100 நாள் வேலை திட்ட முறைகேடுகள் அதிகரித்து வருகிறது என நீதிபதி தெரிவித்தார்..
மதுரை மாவட்டத்தில் தொழில் முனைவோராக விரும்புவோர் மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலம் தேவையான சேவைகளை பெறலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இந்த சேவைகளைப்பெற, உங்களுக்கு அருகில் உள்ள மதி சிறகுகள் தொழில் மையம் மற்றும் 98650 14280, 96004 63744 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளாம் என கூறியுள்ளார்.
மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் அருகே ஆகாயத்தாமரை செடிகள் வைகை ஆற்றை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் Way2 செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து செய்தி எதிரொலியாக நேற்று முதல் அப்பகுதியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ஓரிரு நாட்களில் பணிகள் முடியும் என தெரிவித்துள்ளனர்.
மதுரை மேற்கு கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் இன்று(ஆக.22) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சந்திரா பங்கேற்று மின் நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்று பயனடையலாம் என மதுரை மேற்கு மின் செயற் பொறியாளர் லதா நேற்று அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27ம் தேதி பிற்பகல் 4.30 மணியளவில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.