India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெறும் ஆழ்வார்புரம் பகுதியில் இரு இளைஞர்கள் மீது 5பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் திருப்பாச்சியை சேர்ந்த 26 வயது வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மதுரை மதிச்சியம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு 8வது பிளாட்பார்ம் அருகே அடையாளம் தெரியாத யாசகர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக அந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்து ஓட்டுனர் பிரபு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். ‘இந்துக்களின்
சொத்துகளை காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு கொடுத்து விடும்’ எனக் கூறினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் வகையில் “Rest in Peace” இந்திய தேர்தல் ஆணையம்” என்று அமைச்சர் பிடிஆர் தன் X பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
மதுரை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் மீது ரசாயன பொடி, பால், தயிர் கலந்த தண்ணீரை பீச்சியடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இன்று நடந்த சித்திரை திருவிழா ஏற்பாடு குறித்த பொதுநல வழக்கு விசாரணையில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள விழா ஏற்பாடு திருப்தி அளிப்பதாக பாராட்டியுள்ள நீதிமன்றம் கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்கும் இடத்தில் 2,500 பேரை மட்டும் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.
“மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு திருப்தி அளிக்கிறது. விஐபிக்களுக்கு வழங்கப்பட்ட 2400 பாஸில், ஒரு பாஸ்க்கு ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும், மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் ” என மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை <
மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 104.36 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலை பதிவானது. இதனால் பிற்பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டம் வழக்கத்தைவிட குறைந்த அளவே காணப்பட்டது. இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இதேபோல் வெப்பநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் வெயிலில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பின்னர் 3 நாட்களுக்கு பின் 20 அம் தேதி கடை திறக்கப்பட்ட நிலையில் மது பிரியர்கள் மது வாங்க குவிந்தனர். இதனால் ஒரே நாளில் மதுரை மண்டலத்தில் ரூ.59 கோடியே 74 லட்சத்துக்கு மது விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து தமிழக அளவில் மதுரை மண்டலம் 3 ஆம் இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி வீதியுலாவின் போது ஆயிரக்கணக்கான சிறுமியர் மீனாட்சியம்மன் வேடமணிந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு மீனாட்சியம்மன் வேடமணிவித்து அவரை அம்மன் வீதி உலாவின்போது ஊர்வலமாக அழைத்து சென்றார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.