Madurai

News August 26, 2024

தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ராஜபாளையம் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 26, 27, செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை – மதுரை ரயில் (06664) செங்கோட்டையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1மணிக்கு அதாவது 50 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.

News August 25, 2024

சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குநர் முக்கிய ஆலோசனை

image

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர்
டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமையில் இன்று (25.08.2024) நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

News August 25, 2024

விநாயகர் சதுர்த்தியில் 1008 சிலைகள் வைக்க தீர்மானம்

image

மேலூரில் அகில பாரத இந்து மகா சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேலூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநில விவசாய அணி தலைவர் ரமேஷ் பாண்டியன், மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் பெரி. செல்லத்துரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலூர் தாலுகாவில் ஒரு அடி முதல் ஒன்பதரை அடி வரை 1008 விநாயகர் சிலைகள் வைப்பது என்பது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News August 25, 2024

குருவித்துறையில் வடமாடு மஞ்சுவிரட்டு

image

சோழவந்தான் குருவி துறையில் பவித்ரன் நினைவு குழு சார்பாக வடமாடு மஞ்சுவிரட்டு இன்று நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதியிலிருந்து காளைகள் வந்து கலந்து கொண்டன. இதில் பிடி படாமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருவித்துறை கிராம மக்கள் செய்திருந்தனர்.

News August 25, 2024

மதுரை அருகே எஸ்.ஐ மீது பெண் பாலியல் புகார்

image

மேலூரை சேர்ந்த 36 வயது பெண் மதுரை எஸ் பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதில், நான் ஒரு டெய்லர் கடை நடத்தி வருகிறேன், கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சிறையில் உள்ள எங்களது சங்க தலைவரை ஜாமீன் எடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனில் விவரங்கள் கேட்கும் போது, அதனை சாதகமாக பயன்படுத்தி நேரிலும் செல்போனிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் பெண் கொடுத்த புகாரில், எஸ்ஐ மீது விசாரணை நடக்கிறது.

News August 25, 2024

மதுரையில் அமையும் முதல் சரணாலயம்?

image

மதுரை அவனியாபுரம் அருகே சாமநத்தம் கண்மாய் அமைந்துள்ளது. கிருதுமால் நதியில் இருந்தும், வைகை ஆற்றில் இருந்தும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை இந்தக் கண்மாயில் ஆண்டு முழுவதும் பார்க்க முடிகிறது. மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ள தகவலால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 25, 2024

உணவு பாதுகாப்பு அலுவலர் தேர்வு பட்டியல் ரத்து

image

உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தேர்வு குறித்த பட்டியலுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆக.21 ஆம் தேதி வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்பான தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றி புதிய நியமன ஆணைகளை வழங்க உத்தரவிட கோரிய மனுவில் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம். ஆனால், இறுதி முடிவு நீதிமன்றத்தின் உத்தரவுக்குட்பட்டது என உத்தரவிட்டுள்ளது.

News August 25, 2024

மேலூரில் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம்

image

மதுரை மாவட்டம் மேலூரில் கர்னல் பென்னி குவிக் பெயரில் பழமையான பஸ் நிலையம் இருந்தது. போக்குவரத்துக்கு ஏற்ப இடவசதி இல்லாமல் இருந்துவந்த அந்த பழமையான பஸ் நிலையம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதியுடன் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

News August 24, 2024

முதல்வர் வரலாற்றை அழிக்க முயற்சிக்கிறார் -ஆர்.பி.உதயகுமார்

image

“கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைத்து வரலாற்றை முதல்வர் ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை செக்கனூரணியில் அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய அவர், இந்த போராட்டம் வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சரை பார்த்தால் தமிழகத்தில் ஸ்டாலின் காணாமல் போவார்” என்று தெரிவித்தார்.

News August 24, 2024

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு

image

மதுரையில் நாளை காலை 7 மணியளவில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. விரகனூர் ரிங்ரோடு முதல் அரவிந்த் கண்மருத்துவமனை வரை நடைபெற உள்ள மினி மராத்தான் ஓட்டத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!