India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் விடுமுறையால் பயணிகளின் கூட்ட நெரிசலின்றி செல்லும் வகையில் மதுரை- தாம்பரம் இடையே இன்று(ஆக.27) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நெடுஞ்சாலை துறையின் கீழ் 10 உட்கோட்டங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் ரூ.110 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. அதில் உசிலம்பட்டி, வாடிப்பட்டி, பேரையூர் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகளும், மீதமுள்ள ஏழு உட்கோட்டங்களில் சிறு பாலங்கள் சீரமைப்பு, சாலைகள் புதுப்பிப்பு பணி நடைபெற உள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதந்திர கார்த்திகை முன்னிட்டு முருகன் தெய்வானை மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் முருகன் தெய்வானை எழுந்தருள சிறப்பு பூஜைகளுடன் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் முருகன் தெய்வானையை வழிபட்டனர்.
உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக திருமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டி.இராமநாதபுரம் துணை மின் நிலைய பணிகளையும் கூடுதலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று டி.இராமநாதபுரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுதை நீக்கி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அவரது அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து ஆகஸ்ட் 22 ம் தேதி கட்சிக்கொடியையும், கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், 50 அடி உயர கொடியை மதுரை ஓடைப்பட்டி பகுதியில், த.வெ.க கட்சியினர் நிறுவியுள்ளனர். இதுவே தமிழகத்தில் 50 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட முதல் கட்சிக்கொடி என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் போதை மீட்பு மையத்தில் கவுன்சிலர், சைக்காலஜிஸ்ட், சமூகப்பணியாளர் (சைக்கிரியாட்ரிக் சோஷியல் ஒர்க்கர்), செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் வரும் ஆக.31 க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை நாயக்கர் மகாலின் ஒளி, ஒலி காட்சி புனரமைப்பு பணி காரணமாக கடந்த 3 மாதங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது, 3D லேசர் தொழில்நுட்பத்தில் 45 நிமிடம் நடைபெற உள்ளது. ரூ.8 கோடியிலான இந்த புனரமைப்பில் தரைத்தளம், நாடகசாலை, பள்ளியறை, தர்பார் ஹால் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒளி ஒலி காட்சியை கண்டுகளித்த அனுபவம் உங்களுக்கு உண்டா?
திருச்சி எஸ்பி வருண் குமாருக்கு, முகநூலில் கொலை மிரட்டல் விடுத்ததாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 41 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், உளூந்தூர் பேட்டையை சேர்ந்த சண்முகம் மற்றும் மதுரை, தபால் தந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், மீதமுள்ள 39 பேரை தேடி வருகின்றனர்.
நடிகர் விஜய் கட்சி கொடியை பிரபலப்படுத்தும் வகையில், மதுரையில் நேற்று கட்சி கொடியேற்றும் விழா நடைபெறுவதாக நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். தொடர்ந்து கோரிப்பாளையம் பகுதியில் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்காக அனுமதி வேண்டி போலீசாரிடம் மனு அளித்தனர். ஆனால் மாநகராட்சி தடையில்லா சான்றிதழ் இணைக்கப்படாமல் இருந்ததால், கொடிக்கம்பம் நடுவதற்கான அனுமதியை போலீசார் வழங்காமல் இருந்ததாக தெரிகிறது.
மதுரை பேரையூர் பழனிவேல் 54 நேற்று முன்தினம் இரவு விருதுநகர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, டி. கல்லுப்பட்டி சுப்புலாபுரம் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதைக்கு சென்ற போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடம் இருந்து செல்போன், வாட்ச், ரூ 2,700 மற்றும் பழனிவேல் கார் சாவியைப் பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பிவிட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.