India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலுார் அருகே செம்பூரில் 69 ஏக்கர் பரப்பளவில் மதுரை மத்திய சிறை அமைய உள்ளது. இதற்கான இடத்தை நேற்று காவலர் வீட்டு வசதி கழக டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் நேற்று ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் 3 மாதத்திற்குள் துவங்க உள்ளதால் புதிய சிறைக்கான சாலை வசதி மற்றும் சிறை கட்டமைப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் இவரது மனைவி சுமதி. திருப்பரங்குன்றத்தில் அஞ்சலகத்தில் ஊழியராகப் பணியாற்றினார். நேற்று முன்தினம் சுமதி பணியிலிருந்த போது, அவரது உயரதிகாரி ஒருவர் வேலை சம்பந்தமாக அவரை குறை கூறி, மிரட்டி விளக்க கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த சுமதி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்- மகிழ்மதி என்ற தம்பதியினர் ரூ.9500 மதிப்பிலான தானியங்கி மின்சார மணியை அன்பளிப்பாக வழங்கி உதவினர். இந்த தம்பதியின் செயலை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.
மதுரை கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் விடுதி தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த நிலையில் பெண்கள் தங்கு விடுதியின் கீழ் செயல்பட்டுவந்த விசாகா மருத்துவமனையில் போலீசார் நடத்திய விசாரணையில் அலோபதி மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்ததாக விசாகா மருத்துவமனை மருத்துவர் தினகரன் கைது செய்யப்பட்டார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் அளித்த புகாரில் திடீர் நகர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில இன்று 13.09.2024 ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமக்கும் லீலைக்காக கோயிலிலிருந்து அம்மன் சுவாமி அதிகாலை 05.00 மணியளவில் புறப்பாகி மதுரை ஆரப்பாளையம், புட்டுத்தோப்பிற்கு சென்றது. இதனால் இன்று அதிகாலை 05.00 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும், தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை சாதி பெயரை சொல்லி இழிவாகப் பேசிய சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை திடீர் நகர் போலீஸ் உதவி கமிஷனர், புகார்தாரர்களையும், சுகாதார ஆய்வாளர் ரமேஷிடமும் 2 வாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியாளர் பொண்ணுதாய் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்த தவறுமில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று(செப்.12) செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் வாக்களித்து தி.மு.க-வை ஆட்சியில் அமர வைத்துள்ளனர், அதனால் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதில் எந்த தவறுமில்லை மேலும், மது விற்பனை இல்லையென்றால் ஆட்சியை நடத்த முடியாது என தி.மு.க – அ.தி.மு.க நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் செப்.14 அன்று நடைபெறும் குரூப் 2 தேர்விற்கு தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு மையத்திற்கு வரவேண்டும். தவறினால் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். காலை 9 மணிக்கு தேர்வு கூடத்தின் கேட் அடைக்கப்படும் அதன் பின்னர் எந்த சூழ்நிலையிலும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மதுரையின் அடையாளங்களில் ஒன்றான வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் தற்பொழுது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் தண்ணீர் அளவு சற்றும் குறையாமல் முழுமையாக தண்ணீர் நிரம்பி அந்தி மாலை பொழுதில் தெப்பத்தின் மைய மண்டபத்தின் நிழல் தண்ணீரில் ஓவியமாக காட்சி தந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி வரும் செப்.16ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற உள்ள சுங்கச்சாவடியை இன்று(செப்.12) மமக மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.