India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது, விஜய் மாநாட்டிற்கு பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. ஆனால் மாநாடு நடக்க வேண்டும் என்று தான் அனுமதி வழங்குவார்கள், நிபந்தனை விதிப்பார்கள், ஆனால் மாநாடு நடக்கவே கூடாது என பல்வேறு நிபந்தனை வைத்துள்ளது இந்த திமுக அரசு என குற்றம் சாட்டினார்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மதுரை மாவட்டத்தில் சமூகப் பொறுப்புணர்வுடன் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய ஏதுவாக தங்கள் நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வேண்டும். தனியார் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் 8778945248 என்ற எண்ணில் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளிக்குடி தாலுகாவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி 31, சில நாட்களுக்கு முன் இரவு குடிபோதையில் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகள் சத்தம் போட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன் எழுந்து சிறுமியைக் காப்பாற்றினர். இது குறித்து ஊர் நல அலுவலர் கவுசல்யா புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் தொழிலாளியைக் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் ‘குரூப்- 2’ தேர்வில் 146 மையங்களில் நடைபெற்றது. மதுரை வடக்கு வட்டத்தில் 52, மதுரை தெற்கு வட்டத்தில் 43, மேலூா் வட்டத்தில் 11, திருப்பரங்குன்றம் வட்டத்தில் 26, உசிலம்பட்டி வட்டத்தில் 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு 42,895 போ் விண்ணப்பித்திருந்தனர். இதில், 32,106 போ் தோ்வு எழுதினா். 10,789 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்: ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவன் தைரியத்தை பாராட்டுவதாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டும், நிலைப்பாட்டில் பின் வாங்காமல் இருக்க வேண்டும். நான் கட்சி துவங்கியபோது பல இன்னல்களை சந்தித்தேன். புதிதாக கட்சி துவங்கிய விஜய் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவுக்கு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிளையாடலில் நடந்த முக்கிய லீலைகளை எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் இவ்விழாவில் இன்று(செப்.14) சுந்தரேஸ்வரர் “விறகு விற்ற லீலை” நடைபெற்றது. தனது பக்தரான பாணபத்திரருக்காக விறகு சுமந்து லீலையை எடுத்துரைக்கும் வகையில் சுந்தரேஸ்வரர் விறகை தலையில் சுமந்து நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதுரை மாவட்டத்தில் இன்று 146 மையங்களில் குரூப் 2 போட்டி தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 42, 895 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 32, 106 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 10,789 பேர் தேர்வை புறக்கணித்து ஆப்சென்ட் ஆகியுள்ளனர். சதவீத அடிப்படையில் 25% பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1500 க்கு விற்பனையாகி வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் 400 முதல் 500 ரூபாய்க்கு மல்லிகை பூவின் விலை நாளை ஆவணி மாத முக்கிய முகூர்த்தம் என்பதால் இரு மடங்கு உயர்ந்து 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதிகபட்சமாக கனகாம்பரம் ரூ.3000க்கும், பிச்சி பூ ரூ.800க்கும் செவ்வந்தி ரூ.100, ரோஸ், சம்மங்கி ரூ.200 க்கும் விற்பனையாகின்றன.
மேலுார் அருகே செம்பூரில் 69 ஏக்கர் பரப்பளவில் மதுரை மத்திய சிறை அமைய உள்ளது. இதற்கான இடத்தை நேற்று காவலர் வீட்டு வசதி கழக டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் நேற்று ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் 3 மாதத்திற்குள் துவங்க உள்ளதால் புதிய சிறைக்கான சாலை வசதி மற்றும் சிறை கட்டமைப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் இவரது மனைவி சுமதி. திருப்பரங்குன்றத்தில் அஞ்சலகத்தில் ஊழியராகப் பணியாற்றினார். நேற்று முன்தினம் சுமதி பணியிலிருந்த போது, அவரது உயரதிகாரி ஒருவர் வேலை சம்பந்தமாக அவரை குறை கூறி, மிரட்டி விளக்க கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த சுமதி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.