India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலூர் அருகே கத்தப்பட்டி ராஜா – மலைச்செல்வி தம்பதியினர் அலங்காநல்லூரை சேர்ந்த வினோத்திடம் பெற்ற வட்டி கடனை கேட்டு வினோத் அவரது நண்பர் சிவாவுடன் (27) வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலடைந்த தம்பதி கடந்த செப்.11ம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து வினோத், சிவா ஆகிய இருவரை போலீசார் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்று, நலிந்த நிலையிலுள்ள தமிழக முன்னாள் வீரர்கள் மாதம் ரூ.6000 ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது. தகுதியுடைய நலிந்த நிலையில் உள்ள வீரர்கள் செப்.30க்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று(செப்.15) அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெயில் தாக்கத்தில் பொதுமக்கள் பிற்பகல் நேரத்தில் வெளியே செல்லவதில் இன்னல்களை சந்தித்தனர்.
மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், தமுக்கம் அரங்கத்தில் புத்தகத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இங்கு முன்னணி பதிப்பகங்களின் அரங்குகளும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத் திருவிழா திங்கள்கிழமை வரை (செப் 16) நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு வருகிற செப்.17-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
மதுரை செயல்பட்ட அதிஷ்டம் பார்ம் அலைடு லிமிடெட் என்ற நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி 100 க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருப்புவனத்தை சேர்ந்த நிதி நிறுவன பங்குதாரர்கள் ஜெயக்குமார், அவரது மனைவி வெண்ணிலா, சாந்தி ஆகிய 3 பேரை நேற்று கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரியில் தமிழ்நாடு மேய்ச்சலியம் மாநாட்டிற்கான புதிய லோகோ வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மேய்ச்சலியம் மாநாட்டு லோகோவை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.
வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருக்கும் 1,05,002 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதிக்காக, நொடிக்கு 1130 கனஅடி நீர் திறக்கப்பத்துள்ளது. வைகை அணைக்கு நொடிக்கு 561 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், நொடிக்கு 1130 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கடந்த 06.09.2024 முதல் ‘புத்தகத் திருவிழா 2024″ நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அளித்து வரும் வரவேற்பை தொடர்ந்து 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் நடத்திட திட்டமிடப்பட்டிருந்த புத்தகத் திருவிழா 2024″ மேலும் ஒரு நாள் (17.09.2024) அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை – சண்டிகர் ரயிலின் இணை ரயில் காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.15) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சண்டிகர் விரைவு ரயில் (12687) நாளை திங்கட்கிழமை (செப்.16) அதிகாலை 02.30 மணிக்கு 175 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்காக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார். பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு நீரிருப்பை பொறுத்து 8,461 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 5,697 ஏக்கரும்,மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 24,811 ஏக்கரும் பாசன வசதி பெரும்.
Sorry, no posts matched your criteria.