Madurai

News September 17, 2024

பெண்களுக்கு அனுமதியில்லாத பிள்ளையார் கோவில்

image

மதுரை கொடிக்குளம் கிராமத்தில் யானைமலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விநாயகரை வணங்கினால் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோவிலிருந்து வீட்டுக்கு விபூதி எடுத்து செல்ல கூடாது, பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற கட்டுப்பாடு இன்றளவும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

News September 17, 2024

மதுரையில் 104. 54 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு

image

தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104. 54 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 இடங்களில் வெயில் சதமடித்தது. நாகை, தஞ்சை, ஈரோட்டில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்திய நிலையில் தமிழக அளவில் அதிகபட்சமாக மதுரையில் 104.54 டிகிரி வெப்பம் பதிவானதால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் அவதியடைந்தனர்.

News September 17, 2024

வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

image

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணித்திருவிழாவின் இறுதி நாளான இன்று (16.09.2024) கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News September 17, 2024

2 காவல் அதிகாரிகளுக்கு அண்ணா விருது அறிவிப்பு

image

மதுரை ஊமச்சிகுளம் டிஎஸ்பியாக இருந்த சந்திரசேகர் தற்போது மதுரை துணை கமிஷனராக உள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் அண்ணா பதக்கம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் விளக்குத்தூண் க்ரைம் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மகேஷ் குமாருக்கும் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதக்கத்துடன் ரொக்க பரிசும் வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய அழைப்பு

image

மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2019 டிசம்பர் 31 வரை பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்றால் அதற்கான தாமத கட்டணம் ரூ.200 செலுத்தி பெயர் பதிவுடன் வரும் 2024 டிசம்பர் 31 வரை மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 16, 2024

மன்னிப்பு கேட்டது அகங்காரத்தின் வெளிப்பாடு – மாணிக்கம் தாகூர்

image

மதுரை அருகே வேடர் புளியங்குளத்தில் புதிய பேருந்து பயணிகள் நிழல்குடை மற்றும் தென்பழஞ்சி பகுதியில் நாடக மேடை திறப்பு விழா இன்று (செப்.16) நடைபெற்றது. இதில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி அன்னபூர்ணா உரிமையாளர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டது, பாஜகவின் அகங்காரத்தின் வெளிப்பாடு என கூறினார்.

News September 16, 2024

நாளை மது கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை

image

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளும் நாளை(செப்.17) மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மிலாடி நபி தினத்தில் மது கடைகளை திறந்து மது விற்பனை செய்தால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

News September 16, 2024

நிறைவு பெற்ற ஆவணி மூல திருவிழா

image

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்த ஆவணி மூல திருவிழா நேற்று இரவுடன் நிறைவடைந்ததாக கோவில் நிர்வாகம் அறிவுத்துள்ளது. மேலும் வரும் 20.09.2024 வெள்ளிக்கிழமை அன்று சுந்தரேஸ்வரருக்கு சாந்தபிஷேகம் மற்றும் மஹா ருத்ராபிசேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

மேலூரில் கந்துவட்டியால் தம்பதி தற்கொலை – இருவர் கைது

image

மேலூர் அருகே கத்தப்பட்டி ராஜா – மலைச்செல்வி தம்பதியினர் அலங்காநல்லூரை சேர்ந்த வினோத்திடம் பெற்ற வட்டி கடனை கேட்டு வினோத் அவரது நண்பர் சிவாவுடன் (27) வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலடைந்த தம்பதி கடந்த செப்.11ம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து வினோத், சிவா ஆகிய இருவரை போலீசார் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News September 16, 2024

நலிந்த வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்று, நலிந்த நிலையிலுள்ள தமிழக முன்னாள் வீரர்கள் மாதம் ரூ.6000 ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது. தகுதியுடைய நலிந்த நிலையில் உள்ள வீரர்கள் செப்.30க்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!