Madurai

News September 25, 2024

Way2 செய்து எதிரொலியால் தேனீ கூடு அகற்றம்

image

மதுரை மாவட்டம் திருவாதவூர் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் கோயில் நுழைவாயிலில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளது குறித்து நேற்று Way2 செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தி எதிரொலியாக தீயணைப்புத்துறை உதவியோடு இந்து அறநிலைத்துறை ஊழியர்கள் மலைத்தேனீ கூட்டினை முழுமையாக அகற்றியுள்ளனர்.

News September 25, 2024

லாரியில் மோதி ஒருவர் பலி

image

மதுரை சுப்பிரமணியபுரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் அல்லாபக்ஸ் (41). பீரோ கம்பெனி ஊழியரான இவர் நேற்று இரவு தேனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண்டிப்பட்டி கணவாய் அருகே சென்ற போது லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 25, 2024

அப்துல்கலாம் நினைவிடம்-அரசாணை ரத்து

image

பேக்கரும்பில் அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கியது தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மாடசாமி கோயில், தெப்பக்குளம், சுனாமி குடியிருப்பு, சமுதாயக் கூடத்தை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் வழக்கு தொடர்பாக வருவாய்த்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டது.

News September 25, 2024

பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய பயிற்சியாளர்கள்

image

அண்ணாநகரை சேர்ந்த 39 வயது பெண்ணின் மகன் பயிற்சி பெறும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்சியாளர்களாக பணியாற்றியவர்கள் தேவராஜ் (30), ராஜ்குமார் (28). இப்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது பயிற்சியாளர்கள் இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பெண்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டி ரூ.4 லட்சம்பறித்துள்ளனர். அப்பெண் அளித்த புகாரில் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

News September 25, 2024

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

மேலூரை சேர்ந்த 14 வயது சிறுமி மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு தேர்வு விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் அருகில் வசிக்கும் அருண்குமார் (18) என்ற இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News September 25, 2024

மதுரையில் வரலாறு காணாத வெயில் பதிவு

image

தமிழக அளவில் மதுரை கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாகவே வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், நேற்று (செப்.24) மதுரை விமான நிலையத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி பதிவானது. மதுரை நகர் பகுதியில் 104 டிகிரி பதிவானது. தமிழகத்தின் பல பகுதிகள் மழை பெய்து வரும் நிலையில், மதுரை மக்களை வெயில் வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

News September 25, 2024

மதுரை: அறநிலைய உதவி ஆணையர்கள் பணியிடை மாற்றம்

image

இந்து சமய அறநிலைய துறையில் 23 உதவி ஆணையர்களை பணியிடை மாற்றம் செய்து அரசு செயலாளர் சந்திரமோகன் இன்று (செப்.24) உத்தரவிட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் கணபதி முருகன் சிவகங்கை மடப்புரம் கோவிலுக்கும், கண்காணிப்பாளர் லட்சுமி மாலா திண்டுக்கல் உதவி ஆணையராகவும், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 25, 2024

மதுரை: கொரியரில் கஞ்சா கடத்திய இருவர் கைது

image

மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பிரபல கொரியர் நிறுவனத்திற்கு ஆந்திராவிலிருந்து மரபொம்மை என குறிப்பிட்டு 24 கிலோ பார்சலில் கஞ்சா அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் செல்லூரை சேர்ந்த செல்லவீரு (27), அனுப்பானடி சேது மனைவி திருக்கம்மாள் (45) ஆந்திராவிலிருந்து நூதன முறையில் கஞ்சா கடத்தியது தெரியவர, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News September 24, 2024

மாட்டுத்தாவனி நுழைவு வாயிலை இடிக்க ஐகோர்ட் உத்தரவு

image

மதுரை பிபி குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அதனை இடித்து அகற்ற வேண்டும் என கூறியிருந்தார். நேற்று மனுவை விசாரித்த நீதிபதிகள் நுழைவு வாயில்களை அகற்ற ஆய்வு தேவை இல்லை. மனுவில் குறிப்பிடப்பட்ட நுழைவு வாயிலை இடிக்கலாம் என்று கூறினர்.

News September 24, 2024

மத்திய அரசின் செயல்பாடு குறித்து ஐகோர்ட் கவலை

image

மதுரையில் உள்ள மத்திய அரசின் கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதி விடுப்பில் உள்ளதால் வங்கியில் கடன் வாங்கிய தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் கேரளாவில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று நிவாரணம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களையே அழிப்பது போல் உள்ளது எனவும் வேதனை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!