Madurai

News September 25, 2024

உலக சுற்றுலா தின விழாவிற்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்திலுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் வரும் செப்டம்பர் 27 மற்றும் செப்டம்பர் 28ஆம் தேதிகளில் உலக சுற்றுலா தினம்-2024 மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 25, 2024

சாதிய வன்கொடுமையில் மதுரை முதலிடம்

image

சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில் மதுரை முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ-யில் பெறப்பட்ட காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 45 கிராமங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் இருப்பதாக தகவல். நெல்லை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் பட்டியலில் அடுத்தடுத்த வரிசையில் இடம் பெற்றுள்ளன.

News September 25, 2024

வாக்குமூலத்தில் ஜாதி மதம் குறிப்பிடக்கூடாது – ஐகோர்ட்

image

மாவட்ட அளவில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் சாட்சிகள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறும்போது
அவர்களின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தேவையில்லை என உத்தரவிடக்கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு தாக்கல் செய்த மனு மீதான இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

News September 25, 2024

வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

மதுரையில் உள்ள இளைஞா்கள் பயன்பெறும் வகையில் (செப்.28) அமெரிக்கன் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. எனவே 8ஆம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை பயின்றுள்ள இளைஞா்கள் தங்களது படிப்பு சான்றிதழ் மற்றும் சுய விவரங்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

இ.எஸ்.ஐ குறைதீர்க்கும் முகாம்

image

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வருங்கால வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மதுரை அதன் மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” (நிதி ஆப்கே நிகத்) மற்றும் “இ.எஸ்.ஐ.சி. சுவிதா சமகம்” இணைந்து நடத்தும் குறை தீர்க்கும் முகாம் வரும் 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மதுரை முனிச்சாலையில் உள்ள இ.எஸ்.ஐ கிளை அலுவலகதில் நடக்கிறது.

News September 25, 2024

10 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும் ரயில் நிலையம்

image

மதுரை ரயில் நிலையத்தில் நாள் ஒன்றிற்கு 1 லட்சம் பயணிகளை கையாளும் விதமாக மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை இன்று (25.9) பார்வையிட்ட மதுரை எம்பி வெங்கடேசன், ” மதுரை ரயில் நிலையம் தற்போது உள்ளதை விட 10 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது ” என்று தெரிவித்தார்.

News September 25, 2024

மாரத்தான் முன்பதிவு இன்றே கடைசி நாள்

image

மதுரையில் உடற்பயிற்சியை வலியுறுத்தி வரும் 29 ஆம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெறும் போட்டியில் சிறப்பாக ஓடும் நபர்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இன்று மாலைக்குள் 8220758958 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு
முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News September 25, 2024

பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள்

image

திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்கம் மையத்திற்குட்பட்ட பகுதிகளில், பாசிப்பயறு பயிரிட்டுள்ள விவசாயிகள், செப்டம்பர் 30 க்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும், “பாசிப்பயறு பயிரிட்டுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி பாஸ்புக் நகல், ஆதார் நகலுடன் அருகிலுள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் காப்பீடு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

News September 25, 2024

இந்து அறநிலைய துறை பதிலளிக்க உத்தரவு

image

தமிழகத்தில் உள்ள கோயில்கள், பிற இடங்களில் வளா்க்கப்படும் யானைகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், வனத்துறைச் செயலா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும், பிற இடங்களிலும் உள்ள வளா்ப்பு யானைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News September 25, 2024

Way2 செய்து எதிரொலியால் தேனீ கூடு அகற்றம்

image

மதுரை மாவட்டம் திருவாதவூர் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் கோயில் நுழைவாயிலில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளது குறித்து நேற்று Way2 செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தி எதிரொலியாக தீயணைப்புத்துறை உதவியோடு இந்து அறநிலைத்துறை ஊழியர்கள் மலைத்தேனீ கூட்டினை முழுமையாக அகற்றியுள்ளனர்.

error: Content is protected !!