India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு காரிப் பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி, பச்சைப்பயறு ஆகியவற்றுக்கு காப்பீடு செய்ய வேளாண் துறை இணை இயக்குனர் சுப்பராஜ் இன்று (செப்.26) அழைப்பு விடுத்துள்ளார். காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு ரூ.588,பருத்திக்கு ரூ.200,பச்சை பயிருக்கு ரூ.308. தொகையை பொது சேவை மையம், கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் செலுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி விடுமுறை நாள், காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி, மகாளய அமாவாசை என தொடர்ந்து விடுமுறை வருவதை முன்னிட்டு வரும் 27 முதல் 28ம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மதுரைக்கு 120 பேருந்துகளும், அக்.2ல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்த சூர்யா(23)தரப்பும், அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரவின்ராஜா தரப்பும் ஏரியாவில் யார் பெரிய ஆளு என்பதில் இன்ஸ்டாகிராமில் மாறிமாறி ஸ்டேட்டஸ் வைத்து சவால் விடுத்ததில் ஏற்பட்ட தகராறில் சூர்யாவை 23 ஆம் தேதி பிரவீன் ராஜா தரப்பு வெட்டியதில் காயமடைந்து நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பிரவின் ராஜா, அவரது நண்பர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த பெயின்டராக வேலை பார்த்து வருபவர் சேதுபதி. இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது மகள்களான ரக்சிதா (7) ரக்சனா (5) ஆகிய இரு பெண் குழந்தைகளை குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதுபதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் சேதுராமன் அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்துகின்றனர்.
இந்தியாவில் OTT இணையதளத்தில் ஒளிபரப்பப்படும் திரைப்பட தொடர்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், மத்திய உள்துறை, தகவல் ஒலிபரப்பு துறை செயலாளர்கள், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் அதிக சாதிய வன்கொடுமைகள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில் மதுரை மாவட்டம் முதலிடம், நெல்லை 2வது இடமும், திருச்சி 3ம் இடத்தில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு வெளியிட்ட பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலிடம் பிடித்துள்ள மதுரை மாவட்டத்தில், 45 கிராமங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற ஒராண்டு சான்றிதழ் படிப்பினை தொடங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் https://oneyearcourse editn.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்க்க முன் கூட்டியே புக்கிங் செய்யும் முறை இன்று முதல் அமலாகிள்ளது உறவினர்கள் பல மணி நேரம் சிறை வாசலில் காத்திருக்கும் நிலையை தவிர்க்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் கைதிகளின் உறவினர்கள் உள்ளதாகவே ஃபோன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், முன்னுரிமை அடிப்படையில் காலை 8 மணி முதல் 5மணி வரை கைதிகளை பார்க்க அனுமதிக்கப்படுவர்.
புகையிலை பொருட்களை நாடு முழுவதும் தடை செய்வதற்கு முன்னதாக முதலில், நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்கட்டமாக பள்ளி வளாகங்களுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பதையும், பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இதேபோல் மதுரை நகரத்தில் 105,
டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி எடுத்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் மதுரை மக்களை வாட்டி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.