India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, யாகப்பா நகரை சேர்ந்த சேதுபதி (35) நேற்று தனது மகள்களான ரக்ஷனா (7), ரக்சிதா (5) ஆகியோருக்கு விஷம் கொடுத்தும் கழுத்தில் கம்பியால் குத்தியும் கொடூர கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் மனைவி ராஜேஸ்வரி அவரது உறவினர் ஒருவரிடம் தகாத உறவில் இருந்து வந்ததால் மன உளைச்சலில் சேதுபதி இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் துவக்கத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த DSP அனில்குமாரிடம் நேற்று (செப்.26) குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரனை நடத்தினர். விசாரணை முடிவில் வழக்கு விசாரணை ஒத்திவைக்க்கப்பட்டது.
மதுரையில் வைரஸ் காய்ச்சலால் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவர். நேற்று மாநகராட்சி பகுதியில் இருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் 93 பேர் காய்ச்சலால் பாதித்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளதாக மாவட்ட சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 787 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான மண்ணை இலவசமாக பெற்றுக்கொள்ள உரிய ஆவணங்களுடன் www.tnesevai.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
தந்தையே இரண்டு குழந்தைகளை கழுத்தறத்து கொன்ற கொடூரம் மனித மனங்களை உலுக்கி விட்டது. இது குறித்து மனநல டாக்டர்
விக்ரம் ராம சுப்பிரமணியன் கூறியதாவது, வழக்கமாக மது அருந்தியநிலையில் தான் இது போன்ற கொடூர நிகழ்வுகள் நடக்கும்.
இரண்டாவது மனச் சிதைவு நோய் காரணமாக இருக்கலாம். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடன் பிறந்தவர்களை எதிரியாக
பார்ப்பார்கள். நோயின் தன்மையே பிறரை சந்தேகப்படுவுது தான் என்றார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று (செப்.26) தெரிவித்துள்ளார்.
யூகலிப்டஸ் மரங்கள் நிறைய நிலத்தடி நீரை உறிஞ்சுபவை என்பது கட்டுக்கதை. உண்மையில் அவை மற்ற மரங்களைவிட குறைவான நீரை உரிஞ்சுவதை தேசிய பசுமை தீர்ப்பாய தரவுகள் உறுதிப்படுத்துவதாக மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. யூகலிப்டஸ் மரம் வளர்க்க விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சூழலியல், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம். அதேநேரம் நிலையான வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டுமென கருத்து.
இந்து சமய அறநிலைத்துறை “ஒன்லி வசூல்ராஜா எம்பிபிஎஸ்” வேலையை மட்டுமே செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கோவில்களின் உண்டியல் வசூலை மட்டும் அரசு எடுத்து கொள்கிறது. ஆனால் கோவிலில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இந்து அறநிலைய துறை
வசூல்ராஜா MBBS போல் செயல்படுகிறதா? எனவும் கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்.26) உத்தரவிட்டுள்ளது. மேலும் பாஜக நிர்வாகி செல்வகுமார் தனது செல்போனை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து இதுபோல பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும் என கண்டித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு காரிப் பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி, பச்சைப்பயறு ஆகியவற்றுக்கு காப்பீடு செய்ய வேளாண் துறை இணை இயக்குனர் சுப்பராஜ் இன்று (செப்.26) அழைப்பு விடுத்துள்ளார். காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு ரூ.588,பருத்திக்கு ரூ.200,பச்சை பயிருக்கு ரூ.308. தொகையை பொது சேவை மையம், கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் செலுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.