India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஐசக்டேனியல்(20). இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 5 மாத கர்ப்பமானார். இது குறித்து அறிந்த மாணவியின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் ஐசக்டேனியல் மீது போக்ஸோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் வீரய்யா மகள் முருகேஸ்வரி(18). உத்தங்குடி அல்ட்ரா கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். விடுமுறை தினம் என்பதால் தனது தோழிகளுடன் இன்று வெள்ளரிபட்டியில் உள்ள பி. குளத்து கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற இவர், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானார்.
மதுரையில் கடந்த 2010 இல் முருகன் (எ) கல்லு மண்டையனை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க, ஏடிஎஸ்பி-யை விடகூடுதல் தகுதி கொண்ட சிபிசிஐடி அதிகாரியை நியமித்து 6 மாதத்திற்குள் விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முருகனின் தாய் குருவம்மாள் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில் இழப்பீடு ரூ.20 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது. மதுரை எஸ் எஸ் காலனியில் கடந்த 2019ல் கொள்ளை வழக்கில் கைதான 17வயது சிறுவன் போலீஸ் விசாரணையில் அடித்ததில் உயிரிழந்த வழக்கில் அவரது தாய் நிவாரணம் கோரி தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தேனியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும்
வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.
மதுரை அழகர் கோவில் ஆட்டோ டிரைவர் தயாளன் இவரது மனைவி மீனாட்சி 33. இவர் வீட்டருகே தல்லாகுளம் தனிப்படை போலீஸ் ஏட்டு செல்வராஜுடன் மீனாட்சிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசில் தயாளன் புகார் அளித்தார். ஏட்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு உள்ள நிலையில் இரு நாட்களுக்கு முன் கமிஷனர் லோகநாதரிடம் புகார் அளித்தார். இதனால் ஏட்டு செல்வராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலமாக மதுரை அருகிலுள்ள அகழ்வாராய்ச்சி தளமான கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினமான இன்று நியூ டெல்லி விஞ்ஞான பவனில் நடந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் இருந்து விருதினைப் பெற்றுக் கொண்டார் கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன்.
தமிழகத்தில் கருத்தியல் ரீதியாக எதிரேதிர் தரப்பினர் X தளத்தில் கருத்துகளை பதிவிட்டு சண்டையிட்டு கொண்டிருந்தால், நமக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை. அதனால் அதன் உரிமையாளருக்குதான் லாபம் கிடைக்கும் என மதுரை ஐகோர்ட் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. பஞ்சாமிர்தம் சர்ச்சை கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகி வினோத் பி செல்வத்தின் மீது வழக்கு பதியாததால் முன்ஜாமின் மனு தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
காந்தி ஜெயந்தி தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். அக்.02 அன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், 2024-2025 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முருங்கை பரப்பு விரிவாக்கம் செய்ய ஒரு எக்டருக்கு ரூ.10,000 மானியமும், செடிவகை காய்களுக்கான நிரந்தர பந்தல் அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.3,00,000 மானியம் மற்றும் ஒரு எக்டர் வாழைக்கு முட்டுக் கட்டுதலுக்கு ரூ.25,000 மானியமாக வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.