India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்த முருகன் 34, மனைவி ஜோதிகா 25. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது ஜோதிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஜோதிகா, மணிகண்டன் என்பவரிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவில் மணிகண்டனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதைக்கண்ட கணவர் முருகன் ஆத்திரமடைந்து மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
மதுரை முனியப்பன் நகரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மனைவி ஜோதி, 42. இவரது கணவர், 20 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். தனது மகனுடன் தனியாக வசித்து வந்த ஜோதிக்கு தகாத உறவால் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை கமுதியைச் சேர்ந்த வீரணன்-அபிநயா தம்பதிக்கு ரூ.10,000 விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் இன்று ஜோதிஜோதி, ராஜேஷ், அபிநயா ஆகிய மூவரை கைது செய்தனர்.
மதுரை சிந்தாமணி பகுதியில் நேற்று காலை 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த பை, ஆட்டோ, லோடு வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்ட சக்திவேல் (26), உமா மகேஸ்வரன் (18) மற்றும் 3 சிறார்கள் என 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கத்திகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மதுரை – சிலைமான் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக மதுரையிலிருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – ராமேஸ்வரம் ரயில் (06651), அக்டோபர் 3 ஆம் தேதி காலை 08.05 மணிக்கும் (75 நிமிடங்கள் காலதாமதம்), அக்டோபர் 4 அன்று காலை 08.10 மணிக்கும் (80 நிமிடங்கள் காலதாமதம்) புறப்படும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை பழைய குயவர்பாளையம் சாலையில் இயங்கும் பிரபல இடியாப்பக்கடை ஒன்றில் பாரம்பரியயத்தை பாதுகாக்கும் வகையில் தேங்காய் சிரட்டையில் சிறுதானிய புட்டு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பழமை மாறாமல் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சிரட்டை சிறுதானிய புட்டு தயாரிப்பு மதுரையில் ட்ரெண்டாகி வருகிறது.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மதுரை போடிநாயக்கனூர் வழித்தடத்தில் பயணிக்கும் ரயில் பயணிகள் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்து நகர், கன்னியாகுமரி, அனந்தபுரி ஆகிய ரயில்களில் முன்பதிவில்லா கோச்சில் பயணிப்பதற்கான டிக்கெட்களை போடிநாயக்கனூர், தேனி ஆண்டிபட்டி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வரிச்சியூர் அருகே ஆசிரியர் சுபஶ்ரீ உருவாக்கி இருக்கும் மூலிகைப் பூங்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஆசிரியை சுபஶ்ரீயின் மூலிகைப் பூங்காவை பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி, தனது முயற்சியின் துணையால், கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருப்பதாக பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
கொட்டாம்பட்டியில் இருந்து நேற்று மதுரை நோக்கி 2 கார்கள் வந்துள்ளன. இந்த கார்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து 2 கார்களும் எதிர் திசையில் உள்ள சாலைக்கு சென்றன. அப்போது எதிர் திசையில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது ஒரு கார் பயங்கரமாக மோதியது. மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. காயமடைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஐசக்டேனியல்(20). இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 5 மாத கர்ப்பமானார். இது குறித்து அறிந்த மாணவியின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் ஐசக்டேனியல் மீது போக்ஸோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் வீரய்யா மகள் முருகேஸ்வரி(18). உத்தங்குடி அல்ட்ரா கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். விடுமுறை தினம் என்பதால் தனது தோழிகளுடன் இன்று வெள்ளரிபட்டியில் உள்ள பி. குளத்து கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற இவர், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானார்.
Sorry, no posts matched your criteria.