India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் மற்றும் நீக்கம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளனர். வாடிப்பட்டியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜக குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்ததால் அவர் மீது கோபத்தில் இருந்த பாஜகவிற்கு அடிபணிந்து மனோ தங்கராஜை அமைச்சரவையிலிருந்து நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மதுரை கோட்டத்தில் 11 ரயில் நிலையங்களில் உள்ள 151 பயணச்சீட்டு விற்பனை சாளரங்களில் பணப் பரிவர்த்தனைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் க்யூ ஆர் கோடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாத மொத்த வருமானத்தில் 1.76 சதவீதம் கியூ ஆர் கோடு மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்றிருந்தது. இது செப்டம்பர் மாத கடைசியில் 5.70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை அருகே அழகர் கோவில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் இன்று (செப்.30) மாலை திரைப்பட நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. நடிகை ரோஜாவை காண சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் பலர் முண்டியடித்து வந்து, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தரிசனம் முடிந்து அவர் கிளம்பி சென்றார்.
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வாய்சொல்லில் வீரராக இல்லாமல், கோயிலுக்கு உண்மையான சேவை செய்யத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம்
எந்த யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்தாரோ? அதே யூடியூப் சேனலில் வருத்தம் தெரிவித்து பேட்டி கொடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட கடம்பூர் சார்பதிவாளர் பார்வதி நாதனுக்கு, ரூ.25,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மூல ஆவணங்கள் இல்லை எனக்கூறி கடம்பூரை சேர்ந்த பாண்டியின் பத்திரப்பதிவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பத்திர பதிவு செய்து கொடுக்க உத்தரவு.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை இன்று மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அவதரிக்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் குறித்தும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பொது கழிப்பறைகளில் மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் (சிறுநீர் கழிப்பதற்கு ரூ.2. மலம் கழிப்பதற்கு ரூ.5. குளிப்பதற்கு ரூ.10) விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மதுரை மாநகராட்சி புகார் மையம் எண் 78716 61787 என்ற எண்ணிற்கு தொலை பேசி (அல்லது) வாட்ஸ்அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையதுறைக்குட்பட்ட கோயில்களில் உள்ள மருத்துவ குணம் கொண்ட செடிகள், மரங்கள் உள்ள நந்தவனங்களை இரும்புவேலி அமைத்து பாதுகாக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நந்தவனத்திற்கு போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி கோயிலுக்கு தேவையான பூக்களை அங்கிருந்தே பறித்து பயன்படுத்த உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா வருகின்ற 3 ஆம் தேதி தொடங்கிய 12 ஆம் தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் கொலுச் சாவடியில் அலங்கார பொம்மைகள் சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை பக்தர்கள் உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவிழா நாட்களில் தினசரி ஆன்மீக சொற்பொழிவு இசைக் கச்சேரிகள் நடைபெறும்.
மதுரை மாவட்டம் நரிமேட்டில் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளி ஜெய நகரில் இயங்கும் ஜீவனா பள்ளி மதுரை ராமேஸ்வரம் சாலையில் இயங்கும் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி உட்பட 8 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு விரட்டல் வந்துள்ளது இதை தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.