India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய (காதி கிராஃப்ட்)மையத்தில் இன்று தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் கலந்துகொண்டு விற்பனையை துவக்கி வைத்தார். கதர், பாலிவஸ்தரா, பட்டு ரகங்களுக்கு 30%-ம் உல்லன் ரகங்களுக்கு 20%-ம் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு ரூ.1.37 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 6 சதவீத சொத்துவரி உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடப்பாண்டிற்கு தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்திக்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை மாநகராட்சியில் நடப்பு அக்டோபர் மாதம் முதல் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பது அனைத்து மாநகராட்சிக்கும் பொதுவான உத்தரவுதான் என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
விவசாயத்திற்கு தண்ணீர் வழங்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் உண்பதற்கு அரிசி கிடைக்காது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் மருதூர் காவிரி ஆற்றில் நடக்கும் குடிநீர் திட்டப்பணிகளால் விவசாயம் பாதியாக குறைந்ததாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
காந்தி ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் புதன்கிழமை தடை விதிக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் அறிவித்தாா்.
எனவே ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்யவோ, இவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யவோ கூடாது. கடைகளையும் திறந்துவைக்கவும் கூடாது. தடையை மீறிச் செயல்படுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி மூலம் கடன் உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள், மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவியர் தங்கள் விண்ணப்பத்தை அக்.15க்குள் முன்னாள் படைவீரர் நல துணை அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட காவல் துறையில் பயன் படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஆறு, நான்கு, மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. வரும் 5.10.2024 காலை 10.00 மணிக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. ஏலம் நடைபெறும் நாள் காலை 8 மணி முதல் 10.00 மணிக்குள் தங்களது ஆதார் அட்டையுடன் ரூ.5000 முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள எஸ்பி அரவிந்த் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த விருமாண்டி தாக்கல் செய்த மனு விசாரணையின் போது டெல்டா மாவட்டத்தில் அரிசி சாகுபடி குறைந்து வருகிறது. பொன்னி போன்ற ரகங்கள் தற்போது பயிரிடுவதே இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரிசி உற்பத்தியே இருக்காது என நீதிபதிகள் தெரித்தனர்.
தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூர் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை – கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் (01928) மதுரையிலிருந்து அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 01, 08 15, 22, 29, டிசம்பர் 06, 13, 20, 27, ஜனவரி 03 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த அமரன் பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர். ஒரு கட்டத்திற்குப் பிறகு தனக்கு ஆண் தன்மைதான் அதிகம் இருப்பதை உணர்ந்த அவர் அந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 2021இல் முழுமையாக ஆண் தோற்றத்திற்கு மாறியுள்ளார். வீட்டில் அதற்கு மேல் அவரை ஏற்பார்களா என்பதில் ஒரு போராட்டம் தொடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி தற்போது மதுரை மாநகரில் ஆட்டோ ஓட்டி தன் வாழ்வை கடந்து வருகிறார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் 11 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்களின் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் திறப்பின்போது ரூ.1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 165 ரொக்க பணமும், 455 கிராம் தங்கம், 649 கிராம் வெள்ளி பொருட்களும் 398 அயல் நாட்டு நோட்டுக்களும் காணிக்கையாக பெறப்பட்டன.
Sorry, no posts matched your criteria.