India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை (நவ.7) மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மதுரையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். *ஷேர்* SHARE
கந்தசஷ்டி விழா கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 7ம் தேதி இரவு திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் ரயில் ஆறுமுகநேரி, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8ம் தேதி காலை 10.30க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறை செயலர் மற்றும் பத்திர பதிவுத்துறை தலைவர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சஷ்டி பண்டிகையின்போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம்-திருநெல்வேலி(06099) சூப்பர் பாஸ்ட் ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து நாளை(06.11.2024) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக(வியாழக்கிழமை) காலை 08.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை ஆனையூருக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காவல்துறையினரின் மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. கிராம மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாநகர காவல் துறை சார்பாக மாநகர காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிக்கு காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை வெளியிட்டுள்ள மாநகர காவல் துறை இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காவல் துறையினரின் அலைபேசி எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று(5.11.2024) 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஊமச்சிகுளம், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், திருமங்கலம், பேரையூர், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மாநகர் காவல் துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் எனில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் பழமையான கோவில்களில் மூலிகை தாவரங்கள் நிறைந்த நந்தவனங்களை பராமரிக்கவும், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர கோரி மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சீமான் மற்றும் சாட்டை முருகனால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். சீமான் குறித்து 15 ஆடியோக்களை தான் பதிவேற்றம் செய்திருப்பதை சுட்டிக் காட்டி இந்த மனுவை சூர்யா தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக வில்லாபுரம் அரிமணி (22), கார்த்தி (23), வடிவேல் (34), பெத்தானியாபுரம் சக்தி (23), பெருங்குடி செல்வம் (24) ஆகிய 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைக்க ஆணையாளர் லோகநாதன் உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.