India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக ஆளுநர் ரவி நவ.9,10ல் கோயில் தரிசனத்திற்காக மதுரை, ராமேஸ்வரத்திற்கு வருகிறார். நவ.9 மதியம் சென்னையில் இருந்து மதுரை வரும் ஆளுநர், மாலை 4 மணிக்கு மீனாட்சி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு செல்கிறார். நவ.10 காலை ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடி சென்று, அங்கிருந்து மதியம் புறப்பட்டு மதுரை வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மீனாட்சி கோலாட்ட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 5 ஆம் நாளான இன்று (06.11.2024) வெண்மை நிற பட்டுடுத்தி கோரதத்தில் வீதியுலா வந்தார். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீதி உலா வந்த மீனாட்சியம்மனை மனமுருக வணங்கி வழிபட்டனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை அவர் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்பதாக ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழலில் விஜய் சாதிக்கவோ, வெற்றி பெறவோ வாய்ப்பில்லை என்றார்.
அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டங்களை முடக்குவதைக் கண்டித்தும், சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்திடவும், வண்டல் மண் அனுமதி என்ற போர்வையில் கனிம வளம் கடத்தலைக் கண்டித்தும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மாபெரும் கண்டனப் போராட்டம் சனிக்கிழமை, திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ” என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிகள் வருகின்ற 07.11.2024 & 08.11.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அதிகமான பக்தர்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகைதரும் நிலையில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி 2024 திருநாளை முன்னிட்டு பேருந்துகளை இயக்கிய வகையில் 04.11.2024 அன்று மதுரை மண்டல போக்குவரத்துக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வருவாயாக ரூ.3 கோடியே 80 லட்சம் ஈட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திண்டுக்கல் மண்டலத்தில் ரூ.1 கோடியே 61 லட்சம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் லெட்சுமணன் மது போதையில் வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த வாசுதேவன் கிரைண்டர் கல்லால் அடித்து கொலை செய்தார். கொலை செய்த வாசுதேவன் செல்லூர் காவல்நிலையத்தில் சரண்டைந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்ய இன்று அன்னையிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சன்னாசி நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் கஸ்தூரி மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது மதம், இனம், மொழி குறித்து இருவேறு மக்களிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் திருநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை.
மதுரை, காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் ராமர்(30). இவரது உறவினரான விஜய்(28). ராமரின் 10 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததை கண்டு ராமர் அதிர்ச்சியடைந்தார். அவரை கண்டித்துவிட்டு மகனை வீட்டிற்கு அழைத்து வந்தார். தனக்கு நேர்ந்த தொல்லையை நினைத்து மகன் அழுததால், விஜய் மீது ஆத்திரமடைந்த ராமர் அவரது வீட்டிற்கு சென்று தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.