India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலர், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவராக உள்ள க.சகுந்தலா உட்பட 4 பேரை பதவி நீக்கம் செய்துள்ளார். சட்ட வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படுவோரை நீக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதால் பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகர்மன்றதலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே அமைந்துள்ளது ஆதிமூர்த்தி சிவன் கோவில். இந்த கோவிலில் மட்டும் தான் சிவன் நாக வடிவில் உள்ளார். கோவில் பங்குனி திருவிழா சமயங்களில் சிவனுக்கு உருவம் அமைத்து இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். பங்குனி சிறப்பு நாட்களில் இங்கு நடைபெறும் நித்யபூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் பணவிரயம் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். பணக்கஷ்டத்தில் வாடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
மதுரை மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது . இதில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி மதுரையில் 24 பள்ளிகளில் 75லட்சம் மதிப்பில் அதிநவீன படிப்பகங்கள் அமைக்கபட உள்ளது. மாட்டுத்தாவணியில் 3கோடி மதிப்பில் உணவுத் தெரு அமைய உள்ளது. 10 கோடி மதிப்பில் 2 அறிவியல் பூங்கா ,8 இடங்களில் “நம்ம மதுரை” செல்ஃபீ பாய்ண்ட் அமைய உள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகளுக்கு ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை குறைந்த செலவில் நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாதாந்திர பயிற்சிக்கு ரூ.1500 கட்டணமாக வசூலிக்கப்படும். www.sdat.in.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்வது அவசியம். வல்லுநர்கள் மூலம் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. முதல் நாள் மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கிலம் ஏப்ரல் 4-ம் தேதி மொழிப்பாடம் ஏப்ரல் 7-ஆம் தேதி கணிதம் ஏப்ரல் 11-ல் அறிவியல் ஏப்ரல் 15 இல் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 486 பள்ளிகள் சேர்ந்த 38,483 பேர் பத்தாம் வகுப்பு எழுதவுள்ளனர்.
மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக 2003-இல் மோதல் துவங்கியது. 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் தற்போது வரை நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் அருகில் உள்ள காச்சிகுடா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கும் சென்று வரும் என தெற்கு இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரா, மதுரை மேற்கு அரசரடி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களை நாளை (மார்ச்.27)பகல் 11.00 மணி முதல் 1.00 மணி வரை நேரில் சந்தித்து மின் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்திட உள்ளார். மதுரை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை கூறி பயனடையலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள அந்தமான் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்குள் செருப்பு அணிவது இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதற்கு காரணம் கருப்பசாமி மீது உள்ள பக்திதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊர் எல்லைக்குள் வரும்போதும் செருப்பை கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனை மீறினால் சாமி பலி வாங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. *புது தகவல்னா பகிரவும்*
Sorry, no posts matched your criteria.