India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 9 மீட்டர் உயரத்திற்கு மேல் எழுப்பிய கட்டடங்களை அகற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. உலகப் புகழ் பெற்ற பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அரசாணையை மீறி 9 மீட்டர் உயரத்திற்கு மேல் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை அழகர்மலை மீதுள்ள முருகனின் ஆறாவது படை வீ டான சோலைமலை முருகன் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாள் விழாவான இன்று திருக்கல்யாண வைபவம் சஷ்டி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கள இசை முழங்க வள்ளி,தெய்வானையை மணமுடித்தார் சுப்பிரமணியர். அரோகரா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்ற நிலையில் இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அரசியல் கட்சிகள் நினைப்பது தவறு கிடையாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 1999 ஆம் ஆண்டு மூப்பனார் தலைமையில் கூட்டணி அமைந்த போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று எடுத்துரைக்கப்பட்டது என்றார். மேலும் மதுரையின் “மைல் கல்லாக” எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் எனவும் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவின் போது ஏற்றப்பட்ட அன்னையின் உருவம் தாங்கிய அர்ச்சிக்கப்பட்ட கொடி பக்தர்களின் வேண்டுகோளுக்காக மதுரை வருகிறது. மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தின் அருகே நாளை (நவ 9) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அன்னையின் கொடியை தரிசிக்கலாம் என்று அன்னை வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினர் கூறியுள்ளனர்.
திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் உலகாணி, கல்லணை, ஆலங்குளம், கூடக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக 500 க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார். தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் மூன்று வட்டாட்சியர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியராக இருந்த திருநாவுக்கரசு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்திற்கும், இதே பொறுப்பு வகித்த பாண்டி திருப்பரங்குன்றம் நகர நிலவரித்திட்டம் வட்டாட்சியராகவும், இதே பொறுப்பு வகித்த சுந்தர பாண்டியன் உசிலம்பட்டி தனி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசுத் துறைகள் சார்பில், நிகழாண்டில் ரூ.6,739 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11,186 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.6,739 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டு எஞ்சியுள்ள 39.26 சதவீத இலக்கை நிகழாண்டு இறுதிக்குள் எட்டப்படும் என்றார்.
மதுரையைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார். இவருக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் நேற்று அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், மாணவி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதற்கு கண்ணனேந்தல் பகுதியில் உள்ள கோயில் பூசாரி காரணம் என்பது தெரியவர அவரை போலீஸார் கைது செய்தனர். மாணவி வறுமையை பயன்படுத்தி பாலியல் அத்துமீறியுள்ளார்.
மதுரை மாவட்டத்திற்கு 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் திட்டத்தின் கீழ் 1ரூ.1,186 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் கடந்த மாதம் வரை 60.74% மீதமுள்ளது கடனாக வழங்க திட்டம், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதம் அரசு மானியத்துடன் சுயதொழில், மகளிர் கடன் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அன்னை மீனாட்சி கோலாட்ட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6 ஆம் நாளான இன்று (07.11.2024) மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஆராதனை பூஜை நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை வழிபட்டனர்.
Sorry, no posts matched your criteria.