Madurai

News November 9, 2024

மதுரை ரயிலில் ஹவாலா பணம் கடத்தல்

image

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கொல்லம் மாவட்டம் புனலூர் ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் புனலூர் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் அழப்புழாவை சேர்ந்த பிரசன்னன்(52) என்பவர் ரூ.35.92 லட்சம் ஹவாலா பணத்தை ரயிலில் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மதுரையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

News November 9, 2024

மதுரை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்!

image

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று (நவ.9) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறும் முகாமில் 80க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் 2000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்ய உள்ளதால் வேலை தேடுபவர்கள் முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். *SHARE*

News November 8, 2024

மதுரையில் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று(நவ.8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

கோவில் சொத்துக்கள் போலி ஆவணம் தயாரித்து விற்பனை

image

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ பெத்தனாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை போலி ஆவணம் தயாரித்து பட்டா போட்டு விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் தென்காசி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News November 8, 2024

மதுரையில் இயற்கை சந்தை நிகழ்ச்சி

image

மதுரை காந்தி மியூசியத்தில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி “மதுரை இயற்கை சந்தை” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இயற்கை விவசாய உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அறிவும் பண்பும் கலந்தது கல்வி‘ என்ற தலைப்பில் குழந்தைகள் பெற்றோர்களுடனான கலந்துரையாடல், மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, மரப்பு போட்டிகள் நடைபெற உள்ளது.

News November 8, 2024

திருச்செந்தூரில் கந்த சஷ்டி வழக்கு ஒத்திவைப்பு

image

கந்த சஷ்டி திருவிழாவின் போது, ​​திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவிலில், நபர் ஒருவருக்கு சிறப்பு நுழைவு கட்டணமாக விஸ்வரூப தரிசனத்திற்காக ரூ.3000 வரை வசூலிக்க தடை கோரிய பொது நல மனு மீதான விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

News November 8, 2024

கட்டிடங்களை அகற்ற கோரிய மனு தள்ளுபடி

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 9 மீட்டர் உயரத்திற்கு மேல் எழுப்பிய கட்டடங்களை அகற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. உலகப் புகழ் பெற்ற பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அரசாணையை மீறி 9 மீட்டர் உயரத்திற்கு மேல் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 8, 2024

ஆறாவது படை வீட்டில் திருக்கல்யாண வைபவம்

image

மதுரை அழகர்மலை மீதுள்ள முருகனின் ஆறாவது படை வீ டான சோலைமலை முருகன் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாள் விழாவான இன்று திருக்கல்யாண வைபவம் சஷ்டி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கள இசை முழங்க வள்ளி,தெய்வானையை மணமுடித்தார் சுப்பிரமணியர். அரோகரா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்ற நிலையில் இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது.

News November 8, 2024

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது-ஜிகே வாசன்

image

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அரசியல் கட்சிகள் நினைப்பது தவறு கிடையாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 1999 ஆம் ஆண்டு மூப்பனார் தலைமையில் கூட்டணி அமைந்த போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று எடுத்துரைக்கப்பட்டது என்றார். மேலும் மதுரையின் “மைல் கல்லாக” எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் எனவும் தெரிவித்தார்.

News November 8, 2024

வேளாங்கண்ணி ஆலய கொடி மதுரை வருகை

image

நாகை மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவின் போது ஏற்றப்பட்ட அன்னையின் உருவம் தாங்கிய அர்ச்சிக்கப்பட்ட கொடி பக்தர்களின் வேண்டுகோளுக்காக மதுரை வருகிறது. மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தின் அருகே நாளை (நவ 9) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அன்னையின் கொடியை தரிசிக்கலாம் என்று அன்னை வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினர் கூறியுள்ளனர்.