Madurai

News November 10, 2024

மதுரையில் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே நிலையத்தில் பாலம் வேலை நடைபெறுவதால் நவ.14ல் மதுரை வழியாக திருநெல்வேலி செல்லும் நவ்யுக் விரைவு ரயில் (16788), நவ.17ல் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் வாராந்திர ரயில் (16353) ஆகிய இரு ரயில்களும் திருச்சி செல்லாமல் கரூர், திண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News November 10, 2024

மதுரையில் கழுத்தறுத்து வாலிபர் படுகொலை!  

image

மதுரை சத்திரப்பட்டி அருகே உள்ள ஒயின்ஷாப் பகுதியில் ஒரு வாலிபர் ஒருவர் இன்று(நவ.10) கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாட்டிலை உடைத்து அவர் கழுத்தை அறுத்தது விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய சத்திரப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் அருகில் நின்ற டூவீலர் சிவகங்கை மாவட்ட பதிவெண் என்பதால் இறந்த நபர் சிவகங்கையை சேர்ந்தவரா என போலீசார் விசாரிக்கின்றனர்

News November 10, 2024

தொழிலதிபர் மகன் போதையில் கீழே விழுந்து பலி

image

மதுரை பச்சரிசிக்கார தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் வட மாநிலத்தைச் சேர்ந்த நிமிசந்த் ஜெயின். இவரது மகன் சஞ்சய் குமார் ஜெயினுக்கு(30) மதுப்பழக்கம் இருந்துள்ளது. இன்று(நவ.10) குடிபோதையில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். திடீர்நகர் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

News November 10, 2024

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்

image

பிரபல எழுத்தாளரும் சிறந்த சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்திரராஜன் இன்று(நவ.10)காலை வீட்டில் உள்ள கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்தவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் உடலுக்கு டிவிஎஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News November 10, 2024

வீட்டிற்குள் தூங்கிய சிறுமி; பாம்பு தீண்டி பலி 

image

நாகமலை புதுக்கோட்டை அருகே கரடிபட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் அங்காள ஈஸ்வரி(13). வடபழஞ்சி அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இம் மாணவி நேற்று(நவ.9) இரவு அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வயல் பகுதியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்று இவரை தீண்டியது. மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 10, 2024

மதுரை மக்களுக்கு குட் “நியூஸ்”

image

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஆர்வமாக இருப்பதால், நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.

News November 10, 2024

மதுரையில் டெங்கு பாதிப்பு!

image

மதுரையில் நேற்று(நவ.10) ஒரே நாளில் 41 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களுடன் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 97 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 23 பேர் குழந்தைகள். புறநகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்கள் டெங்கு குறித்து அச்சமடைய தேவை இல்லை என மாவட்ட சுகாதார துறை அறிவித்துள்ளது.

News November 9, 2024

மதுரையில் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாநகர் பகுதியில் இன்று (நவ.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2024

மதுரையில் 1630 மையங்களில் எழுத்தறிவுத்தேர்வு

image

மதுரையில் கடந்த மே மாதம் எழுதப்படிக்கத்தெரியாதோர் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் மொத்தம் 27,735 பேர் எழுத படிக்க தெரியாதவர்களாக கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஜீன்.15 முதல் 1630 எழுத்தறிவு மையங்களில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் நவ.10 அன்று மதுரையில் உள்ள அனைத்து ஆரம்ப & நடுநிலைப்பள்ளிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அடிப்படை எழுத்தறிவுத்தேர்வு நடைபெறவுள்ளது.