India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தளி அடுத்துள்ள காலனட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36) விவசாயி. இவர் டூவீலரில் மதகொண்டப்பள்ளி கக்கதாசம் சாலையில் சம்பவம் அன்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்தது. படுகாயமடைந்த சதீஷை அங்கிருந்தோர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதீஷ் இறந்தார். இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக கட்சியின் சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை வகித்து, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம், மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது மற்றும் அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரியை அடுத்த மேலுமலை பஞ்சாயத்து ஓட்டையப்பன் கொட்டாய் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல தலைமுறைகளாக இந்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இதுநாள் வரை செய்து தரவில்லை என கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் இன்று(ஏப்ரல்.12) தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதள கூட்டரங்கில், காவல்துறை அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யும் பொருட்டு சிறப்பு வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதள கூட்டரங்கில், காவல்துறை அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யும் பொருட்டு சிறப்பு வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
காட்டு யானைகள் கிராமப்புற ஊர்களுக்கு வருவதை தடுக்க வனப்பகுதியில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஜவளகிரி வனப்பகுதியில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பியுள்ளனர். அதனால் காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன. அதனால் காட்டு யானைகள் கிராமப்புறங்களுக்கு வருவது குறைந்துள்ளதாக கூறுகின்றனர். பயிர் சேதங்கள் குறைந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட மா சாகுபடி விவசாயிகள் அவசர கூட்டம் இன்று நடந்தது. மழை இல்லாததால் மா விளைச்சல் வெகுவாக பாதிப்படைந்துள்ளதால் ஏரி குளங்களிலுள்ள தண்ணீரை டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து மா மரங்களுக்கு ஊற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மா மரங்கள் காய்ந்து போனதால் அதற்கேற்றபடி ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் பர்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று கந்திகுப்பம், எலத்தகிரி, வரட்டணப்பள்ளி, நேரலக்கோட்டை, ஒப்பதவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார். முன்னதாக கந்திகுப்பத்தில் பெண்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர்.
ஒசூர் அடுத்த சூளகிரி பேரிகை ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து நடிகை விந்தியா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். சூளகிரி பேரிக்கை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் தெலுங்கு மொழி பேசக்கூடியவர்கள் அதிகம் என்பதால், விந்தியா தெலுங்கு மொழியில் பேசியதால் பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நாகப்பாம்பு தென்பட்டது. இதனை கண்ட மாணவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ரவி தலைமையிலான வீரர்கள் பள்ளியில் உள்ள நாகப்பாம்பை பிடித்து அருகே உள்ள காப்புக்காட்டில் விட்டனர். உடனடியாக பள்ளியில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.